அல்லைப்பிட்டி 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த மாணவி ஞானரூபன் (செவரத்தினம்)ஜென்சிகா அண்மையில் வெளியாகிய தரம் ஜந்து புலமைபரிசில் பரீட்சையில் 160 புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளார்.மாணவி ஜென்சிகா அவர்களை -புலம்பெயர் அல்லைப்பிட்டி மக்கள் சார்பிலும்-அல்லையூர் இணையம் சார்பிலும் பாராட்டி வாழ்த்துவதோடு-தொடர்ந்து அவர் கல்வியில் சிறந்து விளங்க-ஆண்டவன் துணைபுரிய வேண்டுகின்றோம்.
இம்முறை வெளியாகிய புலமை பரிசில் பரீட்சையில் அல்லைப்பிட்டியில் இயங்கும் இரண்டு பாடசாலைகளிலிருந்தும் ஒருவரும் சித்தியடையவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் -சித்தியடைந்த மாணவியான ஜென்சிகா-யாழ் கன்னியர்மடம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.