பிரான்ஸில் காலமான, புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

பிரான்ஸில் காலமான, புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவுதின நிகழ்வுகளின் நிழற்படத்தொகுப்பு!

பிரான்ஸில்  கடந்த 23.03.2018 அன்று காலமான,புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவரும்,மண்கும்பான் கிழக்கில் வசித்தவருமாகிய,அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு-22.04.2018 அன்று பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஆத்மசாந்திக்கிரியையும்,அதனைத் தொடர்ந்து இலக்கம்  2 Rue R obespierre 94200 Ivry-SurSeine என்னும் முகவரியில் அமைந்துள்ள மண்டபத்தில்  பிரார்த்தனை நிகழ்வின் பின் மதியபோசன நிகழ்வும் இடம்பெற்றது.

அத்தோடு தாயகத்தில்  அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும்,ஆதரவற்றோருக்கான அன்னதானம்-என்னும் பசிதீர்க்கும் அரிய பணிக்கு-அன்னாரின் நினைவாக, வவுனியா சிவன் முதியோர் இல்லம்,அம்பாறை அம்மன் மகளிர் இல்லம்,கிளிநொச்சி விஷேட வலையமைப்பு இல்லம் ஆகிய, மூன்று ஆதரவற்றோர் இல்லங்களில் வசிப்பவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டன.

அமரர் கார்த்திகேசு நடராசா அவர்களின் ஆத்மா சாந்தியடைய,எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

கல்வெட்டு ஆக்கம்-அல்லையூர் எஸ்.சிவா…தொலைபேசி இலக்கம் 0651071652

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux