புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலயத்தின் நவதள இராஜகோபுர பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன-படங்கள் இணைப்பு!

புங்குடுதீவு பாணாவிடை சிவன் ஆலயத்தின் நவதள இராஜகோபுர பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன-படங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தின் மேற்திசையில் அமைந்திருக்கின்ற சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவிற்குள் அமைந்துள்ள  ஊரதீவு பகுதியில்  ஐந்திணைச் சூழல் கொண்ட பாணாவிடை என்னுமிடத்தில் லிங்க வடிவிலே அருவுருவமாய் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார் பர்வதவர்த்தினி சமேத இராமலிங்கேஸ்வரப்பெருமான்.

இவ்வாலயத்தின் தோற்றம் பற்றிய வரலாறு தெளிவின்றி இருப்பினும் இது ஒரு பழமையான சிவதலமென்பது குறிப்பிடத்தக்கது.

இச்சிவதலத்தின் புனரமைப்புப் பணிகள் பலகோடி ரூபாக்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.இவ்வாலயத்திற்கு நவதள இராஜகோபுரம் மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டுவருதுடன்-அதன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிய வருகின்றது.

உலகநாடுகள் பலவற்றில்  வசிக்கும்-புங்குடுதீவு மக்களிடம் திரட்டப்பட்டு வரும் நிதியினைக் கொண்டே-இவ்வாலயம் மிகப்பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருவதாகவும்-இவ்வருடத்தில் பணிகள் அனைத்தும் முழுமை பெற்று-கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளதாக -இவ்வாலய  நிர்வாக உறுப்பினர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.

Leave a Reply