தீவகம் வேலணை அம்பிகை நகர் கிராமத்தில் வசித்து வந்த,திருமதி காமாட்சி என்பருடைய வீடு -இன்று வியாழக்கிழமை தீயினால் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. வீட்டுக்குள் இருந்த அனைத்து உடமைகளும் முற்றாக எரிந்து போயுள்ளதாக தெரிய வருகின்றது. வீட்டில் வசித்து வந்த காமாட்சி அவர்களும் தீயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப் படுகின்றது.
காமாட்சியம்மாவினால்,சிறுகச்சிறுக சேர்த்துவைத்த பணமும் தீயில் கருகியுள்ளதை, நிழற்படங்களின் ஊடாக பார்க்க முடிகின்றது.
இவ்வீடானது, அண்மையில் விடிவெள்ளி அமைப்பினால்,புனரமைத்து கொடுக்கப்பட்டதாகவும்-தற்போது காமாட்சி அம்மா குடியிருக்க புதிய வீடு ஒன்று அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதனால், இப் பணிக்கு உதவிட முன்வருமாறு வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.