அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேரேறி வீதியுலா வரும் கண்கொள்ளாக்காட்சியினைக் காண வாரீர்…விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் தேரேறி வீதியுலா வரும் கண்கொள்ளாக்காட்சியினைக் காண வாரீர்…விபரங்கள் இணைப்பு!

இந்த மாதம் 20.04.2018 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் மகோற்சவம் ஆரம்பமாகவுள்ளது என்பதனை புலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களுக்கு அறியத்தருகின்றோம்.

அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகப்பெருமானின் வரலாற்றுச் சுருக்கம்.

இந்துசமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் ஈழமணித்திருநாட்டில் சைவத்தமிழர்கள் செறிந்து வாழும் யாழ்ப்பாண பெருநகரின் தெற்கே வங்க கடலலைகள் நித்திலம் கொலிக்கும் சப்த தீவுகளில் ஒன்றாக விளங்கும் லைடன்தீவின் முதற் கிராமமாக விளங்குவது அல்லைப்பிட்டி.

.
ஏரால், நீரால் வளம் சேர் சீர்பூத்த அல்லைப்பிட்டி கிராமத்தின் மத்தியில் நிலப்பிரபுக்களாகவும் , பண்ணையாராகவும் வாழ்ந்து வந்தவர்கள்தான் செல்லத்துரை உடையார் சொர்ணம்மா அம்மையார் தம்பதியினர்கள்.

.
இத் தம்பதியினருக்கு திருமணமாகி நீண்டகாலமாக குழந்தை
செல்வம் இல்லை.

.
இறைபக்தி மிகுந்த சொர்ணம்மா அம்மையார் மனம் வருந்தி முருகப்பெருமானின் வேல் ஒன்றை பூசை அறையில் வைத்து தனது குறைகளை கூறி பூசித்து வழிபட்டுவந்தார்.

.
என்ன ஆச்சரியமோ ! அம்மையாரின் கனவில் முருகப்பெருமான் தோன்றி “நான் ஆலமரத்தடியில் இருப்பது உனக்கு தெரிவில்லையா !” என கூறி மறைந்து விட்டார்.

.
பூரித்து போன அம்மையார் வீட்டிற்கு அருகாமையில் ஓர் பெரிய ஆலமரம். அவ் ஆலமரப்பொந்தில் வீட்டு பூசை அறையில் இருந்த முருகப்பெருமானின் வேலினை 
அங்கு வைத்து அவ் வேலுக்குக்கு தினமும் விளக்கேற்றி எனக்கு 
குழந்தை செல்வத்தை கொடு என்று வேண்டி தவமிருந்து வழிபட்டு வந்தார்.

.
எங்களுக்கு குழந்தை கிடைத்தால் உனக்கு ஆலயம் அமைத்து தருவதாகவும் வேண்டினார்.

.
அதன் பலனாக அவர்களுக்கு ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

.
தவம் இருந்து பெற்ற குழந்தை என்பதனால் தவவிநாயகம் எனப்பெயர் சூட்டி முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்து வேலினை பிரதிஸ்டை செய்தார்கள்.

.
அக் குழந்தை அர்த்த நட்சத்திரத்தில் பிறந்ததால் வருடந்தோறும் அர்த்த நட்சத்திரத்தில் அலங்கார உற்சவம் நடைபெற்று வந்தது.

.
ஆறுமுகக் கடவுளான முருகப்பெருமானின் திருவருளால் மூத்த புதல்வனை தொடர்ந்து இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஆறுமுகங்களாக செல்லத்துரை உடையார் சொர்ணம்மா அம்மையார் தம்பதியினருக்கு கிடைக்கப்பெற்றார்கள்.

.
பின்பு அவர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளுமாக ஆலயம் முழுமையாக புனர்நிர்மானம் செய்யப்பட்டு மஹா கும்பாபிசேக பெருஞ்சாந்தி விழா 09.04.2017 மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

.
தற்பொழுது முதல் முறையாக எம்பெருமானின் திருவருளால் 
துவாரோகணம் என்று சொல்லப்படுகின்ற கொடியேற்ற வைபவத்துடன் தொடர்ந்து பத்து தினங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகோற்சவ பெருவிழா – 20.04.2018 இடம்பெறவுள்ளது.

.
உடையார் தம்பதியினரின் கடைசி மகனாகிய செல்லத்துரை
நடேசபிள்ளை அவர்கள்
ஆலய தர்மகர்த்தாகவாக இருந்து நல்ல முறையில் ஆலயத்தை பாதுகாத்து பாரமரித்து வருகிறார்.
.
“எல்லாம் முருகப்பெருமான் கிருபை”
.
சுபம்
.
ஆலயவரலாற்று சுருக்க ஆக்கம் :
.
திரு .இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
.
மண்டைதீவு – அல்லைப்பிட்டி – பாரிஸ் – பிரான்ஸ்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux