அமரர் வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அமரர் வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சிறப்புணவு வழங்கிய நிகழ்வு-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 369 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டி-பிரான்ஸ் ஆகிய இடங்களில் வசித்தவருமாகிய, அமரர் வேலுப்பிள்ளை வியாகரத்தினம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு தினம் (திதி) 31.03.2018 சனிக்கிழமையாகும் -அன்னாரின் நினைவு தினத்தை முன்னிட்டு- பரிஸில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் ஆத்ம சாந்தி கிரியை இடம்பெற்றதுடன்-மேலும் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில் -கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு விஷேட மதியச்சிறப்புணவு  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில்,அன்னாரின்  மகள்,மருமகன் உட்பட  உறவினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux