யாழ்ப்பாணத்தை அதிரவைத்த சங்கானை குருக்கள் ஜயா கொலையின் தீர்ப்பு-முழு விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தை அதிரவைத்த சங்கானை குருக்கள் ஜயா கொலையின் தீர்ப்பு-முழு விபரங்கள் இணைப்பு!

விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் இருந்த எம்மை இரா­ணு­வத்­தி­னர் குருக்­க­ளின் கொலை வழக்­கில் சிக்க வைத்­துள்­ளார்­கள் என்று குருக்­க­ளின் கொலை வழக்­கில் குற்­ற­வா­ளி­க­ளாக நீதி­மன்­றால் இனங்­கா­ணப்­பட்டவர்களில் ஒருவரான முகுந்தன் மன்­றில் தெரி­வித்தார். அவர் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பி­லி­ருந்­த­வர்.

சங்­கானைப் பகு­தி­யில் இந்து மத குரு ஒரு­வ­ரைத் துப்­பாக்­கிச் சூட்­டில் படு­கொலை செய்து நகை­களை கொள்­ளை­ய­டித்த வழக்­கின் தீர்ப்பு நேற்று அறி­விக்­கப்­பட்­டது. வழக்கை விசா­ரித்த யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழி­யன் தனது தீர்ப்­பில் தெரி­வித்­த­தா­வது:

சத்­தம் போடாதே என்று மிரட்டி
அப்­பா­வைச் சுட்­டார்­கள்

“இந்த வழக்­கின் முக்­கிய சாட்­சி­ய­மான – கண்­கண்ட சாட்­சி­ய­மாக உயி­ரி­ழந்த குருக்­க­ளின் மக­னும் , துப்­பாக்கி சூட்­டுக்கு இலக்­காகி படு­கா­ய­ம­டைந்­த­வ­ரு­மான முத­லாம் சாட்சி, தனது சாட்­சி­யத்­தில், சம்­பவ தினத்­தன்று, வெளி­யில் இருந்து நான் வீட்­டுக்­குச் செல்­லும்­ போது வீட்­டுக்கு அரு­கில் நின்ற 2ஆம் மற்­றும் 3ஆம் எதி­ரி­கள் என்னை வழி­ம­றித்து சத்­தம் போட வேண்­டாம் என்று மிரட்­டி­னார்­கள். நான் அதை­யும் மீறி சத்­தம் எழுப்­பி­ய­போது, எனது சத்­தத்தை கேட்டு ஓடி வந்த அப்பா மீது மூன்­றாம் எதிரி துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னார். அப்பா மீது துப்­பாக்­கிச் சன்­னங்­கள் பட்டு அவர் கீழே விழுந்­த­போது நான் அவரை தூக்க முற்­பட்­டேன். என் மீதும் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னர். எனக்கு காயம் ஏற்­பட்டு நான் அங்­கி­ருந்து ஓடி­னேன்“

அண்­ணா­வை­யும்
சுட்­டார்­கள்

“இந்த சத்­தம் கேட்டு அண்ணா ஓடி வந்த போது அண்ணா மீதும் துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டது. அவற்றை நான் மறைந்­தி­ருந்து பார்த்­தேன்“

சுட்­ட­வர்­க­ளைக்
கண்­டு­விட்­டேன்

“அவர்­கள் வீட்­டில் இருந்த எமது மோடார் சைக்­கிளை எடுத்­துக்­கொண்டு போகும்­போது தமது முகத்­தில் கட்டி இருந்த கறுத்த துணியை கழட்டி வீசி­னார்­கள். அதன்­போது நான் அவர்­கள் முகத்தை நன்­றாக அடை­யா­ளம் கண்டு கொண்­டேன். மூன்­றாம் எதிரி தான் அப்பா மீதும் என் மீதும் அண்ணா மீதும் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­னார். தப்பி செல்­லும் போது மூன்­றாம் எதிரி மோட்­டார் சைக்­கி­ளில் பின் புற­மாக திரும்பி உட்­கார்ந்து துப்­பாக்­கியை நீட்­டிக்­கொண்டே சென்­றார்“ என்று மன்­றில் சாட்­சி­யம் அளித்­தி­ருந்­தார்.

பொலி­ஸா­ருக்கு
அறி­வித்­தோம்

வீட்­டில் இருந்த மற்­றை­ய­வர் சாட்­சி­யம் அளிக்­கும் போது , “வீட்­டுக்கு வெளி­யில் சத்­தம் கேட்டு ஓடி வந்த போது அப்பா மீது துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அண்ணா மீது துளசி மாடத்­திற்கு அரு­கில் துப்­பாக்­கிச் சூடு நட்­தப்­பட்­டது. நாங்­கள் வீட்­டுக்­குள் ஓடிச் சென்று அறைக்­குள் புகுந்து கதவை சாத்­தி­கொண்­டோம். கதவை உடைக்க முயற்­சித்­தார்­கள். நாங்­கள் உள்ளே இருந்து தொலை­பேசி ஊடாக மானிப்­பாய் பொலி­ஸா­ருக்கு அறி­வித்­தோம். மூவ­ரும் வீட்­டில் இருந்து செல்­லும் போது நான் யன்­னல் வழி­யாக பார்த்­தேன். மூன்­றாம் எதிரி துப்­பாக்­கி­யு­டன் மோட்­டர் சைக்­கி­ளின் பின் புற­மாக திரும்பி உட்­கார்ந்து சென்­றதை கண்­டேன்“ என்­றார்.

இரா­ணுவ கோப்­பி­ர­லும்
மற்­றை­யோ­ரும் நண்­பர்­கள்

வழக்­கின் மற்­று­மொரு முக்­கிய சாட்சி, அள­வெட்டி இரா­ணுவ முகா­மில் கட­மை­யில் இருந்த இரா­ணுவ சிப்­பாய். அவர் தனது சாட்­சி­யத்­தில், “முத­லாம் இரண்­டாம் எதி­ரி­கள் சம்­பவ தினத்­தன்று தமது முகா­முக்கு முன்­பாக மாலை 6 மணி­ய­ள­வில் மூன்­றாம் எதி­ரி­யான இரா­ணுவ கோப்­ர­லு­டன் உரை­யா­டி­யதை கண்­டேன். பின்­னர் அரு­கில் இருந்த தேநீர்க் கடைக்­குள் மூவ­ரும் சென்­ற­னர். பின்­னர் மூவ­ரும் திரும்பி வந்­ததை அவ­தா­னித்­தேன்” என்று சாட்­சி­யம் அளித்­தார்.

அத்­து­டன் “இரவு 7 மணி 7.15 மணி­ய­ள­வில் மூன்­றாம் எதி­ரி­யான இரா­ணுவ கோப்­ரல் தனது துப்­பாக்­கி­யு­டன் முகா­மின் பின் பக்­க­மாக வேலி ஊடா­கச் சென்­றார். அவர் தன்னை விட அதி­கா­ரம் கூடி­ய­வர் என்­ப­தால் தான் அவ­ரைப் பின் தொட­ர­வில்லை. அவ்­வாறு வேலி ஊடா­கச் சென்­ற­வர் 8.45 அள­வில் ஒரு­வித பதட்­டத்­து­டன் வந்­தார். அவர் தனக்கு களைப்­பாக உள்­ள­தா­கத் தெரி­வித்­துத் தான் ஓய்­வெ­டுக்க போகி­றேன் என்­று­கூறி முகா­முக்­குள் சென்று விட்­டார்“

துப்­பாக்­கி­களை
மேஜர் பரி­சோ­தித்­தார்

“சில நிமி­டங்­க­ளில் சுன்­னா­கம் இரா­ணுவ முகா­மில் இருந்து மேயர் ராம­நா­யக்க எமது முகா­முக்கு வந்து துப்­பாக்­கிச் சூடு நடை­பெற்­றுள்­ளது. அது தொடர்­பில் விசா­ரிக்க வேண்­டும் என்று கூறி எமது முகா­மில் உள்ள இரா­ணு­வத்­தி­ன­ரின் துப்­பாக்­கி­க­ளைப் பரி­சோ­தித்­தார்“

கோப்­பி­ரல் கைது

“மூன்­றாம் எதி­ரி­யின் துப்­பாக்­கி­யில் இருந்து துப்­பாக்­கிச் சூடு நடத்­தப்­பட்ட மணம் வந்­தது. அவ­ருக்­குக் கொடுக்­கப்­பட்ட துப்­பாக்­கிச் சன்­னங்­கள் மற்­றும் கூடு­கள் (மக­சீன்) என்­ப­வற்­றைச் சோதனை செய்­த­போது 4 துப்­பாக்கி சன்­னங்­கள் குறை­வாக காணப்­பட்­டன. அவரை மேஜர் அழைத்து சென்­றார்” என்று சாட்­சி­யம் அளித்­தார்.

பொலி­ஸா­ரி­டம்
ஒப்­ப­டைப்பு

இரா­ணுவ மேயர் ராம­நா­யக்க சாட்­சி­யம் அளிக்­கை­யில், “ தான் மூன்­றாம் எதி­ரி­யான இரா­ணுவ கோப்­ர­லைக் கைது செய்து சுன்­னா­கம் இரா­ணுவ முகா­முக்கு அழைத்து சென்று விசா­ரணை செய்­தேன். பின்­னர் அவ­ரை­யும் அவ­ரது துப்­பாக்கி மற்­றும் துப்­பாக்கி சன்­னங்­கள் என்­ப­வற்­றை­யும் மானிப்­பாய் பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­தேன்” என்று சாட்­சி­யம் அளித்­தார்.

எதி­ரி­கள் கைது
நகை­கள் மீட்பு

மானிப்­பாய் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சாட்­சி­யம் அளிக்­கை­யில், “இரா­ணுவ மேஜ­ரா் ஒப்­ப­டைத்த இரா­ணுவ கோப்­ர­லி­டம் விசா­ரணை நடத்­தி­னோம். 2ஆம் எதி­ரி­யின் வீட்­டுச் சாமி அறை­யில் இருந்து கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை­கள் என்ற சந்­தே­கத்­தில் அவற்றை மீட்­டேன். இரண்­டாம் எதி­ரி­யின் மனை­வி­யின் தாயா­ரி­டம் இருந்து சில நகை­களை மீட்­டேன். முத­லாம் எதி­ரி­யி­டம் இருந்­தும் குருக்­க­ளு­டை­யது என்று சந்­தே­கப்­பட்ட உருத்­தி­ராட்ச கொட்டை உள்­ளிட்ட சில நகை­களை மீட்­டேன்” என்று சாட்­சி­யம் அளித்­தி­ருந்­தார்.

நகை­கள்

பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­யால் மீட்­கப்­பட்­ட­தாக மன்­றில் ஒப்­ப­டைக்­கப்­பட்ட நகை­களை சாட்­சி­யங்­கள் தங்­க­ளு­டை­யவை என்­றும் தமது தந்­தை­யா­ரு­டை­யது என்­றும் அடை­யா­ளம் காட்­டி­னர்.

மேய­ருக்கு
பாராட்டு

இந்த வழக்­கில் எதி­ரி­க­ளைக் கைது செய்­வ­தற்­குக் கார­ண­மாக இருந்த இரா­ணுவ மேயர் ராம­நா­யக்­கவை நீதி­மன்று பாராட்­டு­கின்­றது. சம்­ப­வம் நடை­பெற்று ஓரிரு மணித்­தி­யா­லங்­க­ளுக்­குள் துப்­பாக்­கிச் சூடு நடத்­தி­ய­வரை அடை­யா­ளம் கண்டு கைது செய்து பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைத்­த­மைக்­குப் பாராட்­டுக்­கள்.

அதே­வேளை பொலி­ஸா­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட மூன்­றாம் எதி­ரியை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்தி மற்­றைய இரண்டு எதி­ரி­க­ளை­யும் விரை­வாக கைது செய்­த­து­டன் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்ட நகை­களை மீட்­டி­ருந்த மானிப்­பாய் பொலி­ஸா­ரை­யும் மன்று பாராட்­டு­கி­றது.

சூடு நடத்­தி­யது
கோப்­பி­ர­லின்
துப்­பாக்­கியே

சம்­பவ இடத்­தில் இருந்து தட­ய­வி­யல் பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்ட துப்­பாக்கி சன்­னத்­தின் வெற்­றுக்­கோது, இரா­சா­யன பகுப்­பாய்­வுத் திணைக்­க­ளத்­துக்கு அனுப்­பப்­பட்­டது. அதனை பரி­சோத்­தித்த இர­சா­ய­ன­ப­குப்­பாய்வு திணைக்­கள அதி­காரி மன்­றில் சாட்­சி­யம் அளிக்­கை­யில் மூன்­றாம் எதி­ரி­யின் துப்­பாக்­கி­யில் இருந்தே இந்த சன்­னம் வெளி­யே­றி­யுள்­ளது என்று சாட்­சி­யம் அளித்­தார்.

சம்­பவ இடத்­திற்கு அரு­கில் இருந்து ஆண்­கள் பயன்­ப­டுத்­தும் துவிச்­சக்­கர வண்டி மீட்­கப்­பட்­டது. அது எதி­ரி­கள் வந்த துவிச்­சக்­கர வண்­டி­யாக இருக்­க­லாம். அவர்­கள் தப்­பிச் செல்­லும் போது குருக்­க­ளின் மோட்­டார் சைக்­கி­ளைக் கொள்­ளை­ய­டித்து சென்­ற­னர். அந்த மோட்­டார் சைக்­கிள் பெற்­றோல் தீர்ந்த நிலை­யில் இள­வாலை பகு­தி­யில் இருந்து பொலி­ஸா­ரால் மீட்­கப்­பட்­டது.

குற்­றம் நிரூ­ப­ணம்

சந்­தர்ப்ப சூழ் நிலைச் சாட்­சி­யங்­கள் மற்­றும் கண்­கண்ட சாட்­சி­யங்­கள் என்­ப­வற்­றின் அடிப்­ப­டை­யில் 2ஆம் மற்­றும் 3ஆம் எதி­ரி­கள் குற்­றச் செய­லில் நேர­டி­யாக தொடர்பு பட்டு உள்­ளார்­கள் என்­பது நிரூ­ப­ணம் ஆகு­கின்­றது.

பன்­றி­யைச் சுடவே துப்­பாக்கி

முத­லாம் எதிரி தொடர்­பில் மூன்­றாம் எதிரி சாட்­சிக் கூண்­டில் ஏறிச் சாட்­சி­யம் அளிக்­கை­யில், “அன்­றைய தினம் எனது பிறந்த நாள். அத­னால் முத­லாம் எதிரி மாலை 6.30 மணி­ய­ள­வில் என்னை முகா­மில் சந்­தித்­தார். பின்­னர் பன்றி ஒன்­றைச் சுட வேண்­டும். என்­று­கூறி முத­லாம் இரண்­டாம் எதி­ரி­கள் எனது துப்­பாக்­கியை வாங்கி சென்­ற­னர். நான் அவர்­க­ளி­டம் துப்­பாக்­கியை மாத்­தி­ரமே கொடுத்து விட்­டேன். நான் அவர்­க­ளு­டன் செல்­ல­வில்லை. இரவு 8.30 மணி­ய­ள­வில் துப்­பாக்­கியை மீண்­டும் என்­னி­டம் கொண்டு வந்து தந்­தார்­கள். அப்­போது தாம் பன்­றிக்கு சுட்­ட­தா­க­வும் , ஆனால் பன்­றிக்கு துப்­பாக்கி சூடு பட­வில்லை அத­னால் அது தப்பி விட்­டது என்று கூறி துப்­பாக்­கியை தந்­தார்­கள்” என்று சாட்­சி­யம் அளித்­தார்.

நேரடி தொடர்பு.

அவ­ரது சாட்­சி­யத்­தின் பிர­கா­ரம் முத­லாம் மற்­றும் இரண்­டாம் எதி­ரி­கள் இந்த வழக்­கில் நேர­டி­யாக தொடர்பு பட்டு உள்­ளார்­கள். துப்­பாக்கி கொடுக்­கல் வாங்­கல் இடம்­பெற்­றுள்­ளது என்­பது நிரூ­ப­ணம் ஆகு­கின்­றது. பன்­றிக்­குச் சுட தான் துப்­பாக்கி கொடுத்­தேன். என்­ப­தில் நம்­ப­கத்­தன்மை இல்லை.

மூவ­ரும் குற்­ற­வா­ளி­கள்

ஆகவே மூவ­ரும் பொது எண்­ணத்­து­டன் இக் குற்­றத்தை புரிந்­துள்­ளார்­கள். என்­பது நிரூ­ப­ணம் ஆகு­கின்­றது. எதி­ரி­கள் தரப்பு சட்­டத்­த­ர­ணி­கள் சாட்­சி­யங்­களை குறுக்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­திய போதி­லும் , முறி­ய­டிக்­கப்­ப­ட­வில்லை.

ஆகவே எதி­ரி­கள் மீதான குற்­றச் சாட்­டுக்­கள் நிரூ­ப­ணம் ஆன­தால் , எதி­ரி­கள் மூவ­ரை­யும் இந்த மன்று குற்­ற­வா­ளி­யாக காண்­கி­றது. என்று நீதி­பதி திர்ப்­பில் தெரி­வித்­தார்.

எதி­ரி­க­ளி­டம் மூவ­ரும் மன்­றுக்கு ஏதா­வது சொல்ல விரும்­பு­கின்­றீர்­களா? என்று நீதி­பதி வினா­வி­னார்.

புலி­கள் அமைப்­பில் இருந்­த­தால்
இரா­ணு­வத்­தி­னர் சிக்க வைத்­த­னர்

அதற்கு முத­லாம் எதி­ரி­யான காசி­நா­தன் முகுந்­தன் அல்­லது சக்தி என்­ப­வர் எதிரி கூண்­டில் நின்று, “நான் இந்த குற்­றத்தை செய்­ய­வில்லை. நான் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பில் இருந்து பின்­னர் விலகி இருந்­தேன். என்னை 2010ஆம் ஆண்டு சுன்­னா­கம் இரா­ணுவ முகாமை சேர்ந்த இரா­ணு­வத்­தி­னர் கைது செய்­தி­ருந்­த­னர். என்­னி­டம் விடு­த­லைப்­பு­லி­கள் தொடர்­பி­லும் , அவர்­கள் ஆயு­தங்­கள் எங்கே மறைத்து வைக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் அடித்து துன்­பு­றுத்தி பல­வா­றாக விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

தேர்­முட்­டிக்­குள்
புலி­கள் இருந்­த­னரா?

இரா­ணு­வத்­தி­ன­ரின் பிடி­யில் இருந்த போது ஒரு நாள் சங்­கானை முருக மூர்த்தி ஆலய தேர்­முட்­டிக்­குள் விடு­த­லைப்­பு­லி­கள் உறுப்­பி­னர்­கள் மறைந்து இருப்­ப­தா­க­வும் , அவர்­க­ளுக்கு யார் உண­வ­ளிப்­ப­தா­க­வும் கோரி விசா­ரணை நடாத்­தி­னார்­கள். நான் எது­வும் தெரி­யாது என பதில் அளித்­தேன்.

பின்­னர் ஒரு நாள் தேர்­முட்­டிக்கு அரு­கில் வென்­சா­த­மும் சம்­ப­லும் பார்­ச­லாக கிடந்­தது. அது குருக்­கள் வீட்டு சாப்­பாடு தானே என என்­னி­டம் விசா­ரணை செய்­த­னர். நான் தெரி­யாது என கூறி­னேன்.

பின்­னர் நான்கு மாதம் அள­வில் என்னை சுன்­னா­கம் இரா­ணுவ முகா­மில் தடுத்து வைத்து விசா­ரணை செய்த பின்­னர் விடு­தலை செய்­த­னர்.

இரா­ணு­வமே கைது செய்­தது
பொலி­சா­ருக்கு எது­வும் தெரி­யாது

பிற­கொ­ரு­நாள் நான் மோட்­டார் சைக்­கி­ளில் சென்று கொண்­டி­ருந்த போது என்னை மீள இரா­ணு­வத்­தி­னர் கைது செய்து பவள் கவச வாக­னத்­தில் ஏற்­றிச் சென்று உடு­வில் இரா­ணுவ முகா­மில் ஓரிரு நாள்­கள் தடுத்து வைத்­த­னர். பின்­னர் என்னை மானிப்­பாய் பொலிஸ் நிலை­யத்­தில் சக்தி என பெயர் சூட்டி இரா­ணு­வத்­தி­னர் ஒப்­ப­டைத்­த­னர்.

எனக்கு சக்தி என ஒரு பெய­ரில்லை. எனது பெயர் காசி­நா­தன் முகுந்­தன். என்னை போலி­சார் கைது செய்­ய­வில்லை. எனது வீடு எங்கே இருக்­கி­றது எனக்கு திரு­ம­ணம் முடிந்­ததா என்­பது முதல் எது­வும் என்­னைப்­பற்­றிய எந்த தக­வ­லும் பொலி­ஸா­ருக்­குத் தெரி­யாது. இரா­ணு­வத்­தி­னர் ஒப்­ப­டைக்க என் மீது பொய் வழக்கு தொடர்ந்­துள்­ள­னர்.

வேறு வழக்­கி­லும்
சிக்க வைத்­த­னர்

இதே போன்றே அள­வெட்­டி­யில் நடந்த துப்­பாக்கி சூட்டு சம்­ப­வம் ஒன்­று­டன் என்னை தொடர்பு படுத்தி மல்­லா­கம் நீதி­மன்­றில் வழக்கு தாக்­கல் செய்­யப்­பட்­டது. அது தள்­ளு­ப­டி­யா­கி­யுள்­ளது.

இந்த வழக்­கினை பொலி­ஸார் மீள­வும் விசா­ரித்­தால் உண்­மை­யான குற்­ற­வா­ளி­க­ளைக் கண்­டு­பி­டிக்க முடி­யும். எனக்­கும் இந்த வழக்­குக்­கும் எந்த தொடர்­பும் இல்லை.

சிங்­க­ளம் தெரி­யாது.

நானும் மூன்­றாம் எதி­ரி­யான இரா­ணுவ கோப்­ர­லும் நண்­பர்­கள் என கூறு­கின்­றார்­கள். ஆனால் எனக்­குச் சிங்­க­ளம் தெரி­யாது. அவ­ருக்கு தமிழ் தெரி­யாது. அப்­படி இருக்­கை­யில் நாங்­கள் இரு­வ­ரும் எவ்­வாறு நண்­பர்­க­ளாக இருக்க முடி­யும் ? எனவே இந்த வழக்கு தொடர்­பில் மீள் விசா­ரணை செய்­தால் பல உண்­மை­கள் வெளி வரும் என்­றார்.

புலி­கள் அமைப்­பில்
சரி­யாக வளர்ந்­த­வன்

அதனை அடுத்து இரண்­டாம் எதி­ரி­யான பால­சுப்­பி­ர­ம­ணி­யம் சிவ­ரூ­பன் தெரி­விக்­கை­யில், “நான் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பில் இருந்­தேன். அத­னால் என்னை திட்­ட­மிட்டு இரா­ணு­வத்­தி­னர் இந்த வழக்­கில் மாட்­டி­யுள்­ளார்­கள். எனக்கு குருக்­கள் வீட்­டில் படு­கொலை செய்து கொள்­ளை­ய­டிக்க வேண்­டிய தேவை இல்லை. அப்­ப­டி­யான வளர்ப்­பில் வளர்ந்­த­வன் இல்லை என்­றார்.

இரு­வ­ரும் நண்­பர்­கள்

அத­னைத் தொடர்ந்து மூன்­றாம் எதி­ரி­யான இரா­ணுவ கோப்­ரல் பேதுரு குண­சேன தெரி­விக்­கை­யில், இந்த கொலை சம்­ப­வத்­து­டன் நான் தொடர்பு பட­வில்லை. முத­லாம் எதிரி எனது நண்­பர் அன்­றைய தினம் எனது பிறந்­த­நாள் அத­னால் முத­லாம் மற்­றும் இரண்­டாம் எதி­ரி­கள் என்னை முகா­மில் வந்த சந்­தித்து முகா­முக்கு முன்­னால் இருந்த தேநீர் கடை­யில் தேநீர் அருந்­தி­னோம். அப்­போது எனது துப்­பாக்­கியை தரு­மா­றும் பன்றி ஒன்­றினை சுட வேண்­டும் என்­றும் முத­லாம் எதி­ரி­யான எனது நண்­பர் என்­னி­டம் தமி­ழில் கேட்­டார். அதனை இரண்­டாம் எதிரி சிங்­க­ளத்­தில் மொழி பெயர்த்து எனக்கு கூறி­னார்.

அவர்­கள் இரு­வ­ரும் எனது நண்­பர்­கள் என்­ப­தால் நான் அவர்­க­ளி­டம் எனது துப்­பாக்­கி­யைக் கொடுத்­தேன். நான் துப்­பாக்கி கொடுத்த குற்­றத்தை ஏற்­றுக்­கொள்­கி­றேன். ஆனால் கொலை நடை­பெற்ற இடத்­திற்கு நான் செல்­ல­வும் இல்லை கொலை செய்­வும் இல்லை” என்­றார்.

தீர்ப்பு.

அத­னை­ய­டுத்து நீதி­பதி தண்­டனை தீர்ப்பை வழங்­கி­னார்.
அதில் எதி­ரி­கள் மூவர் மீதும் சுமத்­தப்­பட்ட ஐந்து குற்­ற­சாட்­டு­க­ளும் கண்­கண்ட சாட்­சி­யங்­கள் , சந்­தர்ப்ப சூழ்­நிலை சாட்­சி­யங்­கள் என்­ப­வற்­றின் அடிப்­ப­டை­யில் சந்­தே­கத்­திற்கு இட­மின்றி வழக்கு தொடு­னர் தரப்­பால் நிரூ­பிக்­கப்­பட்டு உள்­ளது என்று தீர்ப்­ப­ளித்­தார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux