யாழ் தீவகம் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

யாழ் தீவகம் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த பெருநாள் விழாவின் நிழற்படத்தொகுப்பு!

யாழ் தீவகம்  குருசடித்தீவு தூய அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருநாள்விழா (17.03.2018) சனிக்கிழமை  இன்று வெகுசிறப்பாக இடம்பெற்றது.
யாழ் மறைமாவட்டத்தின் புனித ஸ்தலங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் தீவகம் குருசடித்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கடந்த புதன்கிழமை மாலை கொடி ஏற்றத்துடன் ஆரம்பமாகியது.
இந்நிலையில் இன்று காலை பெருநாள்விழாவின்  திருப்பலி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
பெருநாளின் திருப்பலிப்பூஜையினை, யாழ் நாவாந்துறை ஆலய பங்குத்தந்தை அன்ரனிபாலா அவர்களுடன்-  மன்னார் மாந்தை பங்குத் தந்தை மரியதாஸ் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.
அத்துடன்  விசேட  ஆராதனை வழிபாடுகளும் திருச்சுரூப சுற்றுப் பவனியும் இடம்பெற்றது. 
இந்திருவிழா திருப்பலியில் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, ஆகிய பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை இத்தீவிற்கு யாத்தரிகர்கள் பாதுகாப்பான முறையில் சென்றுவருவதற்கு ஏதுவாக கடற்படையினர், விசேட பாதை ஒன்றை அமைத்ததுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டனர்.
நிழற்படங்கள்…செல்வன் ஜங்கரன் சிவசாந்தன் 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux