யாழ்/அல்லைப்பிட்டியில் இயங்கும்,பராசக்தி வித்தியாலயத்தின் முழுமையான திருத்தப்பணிகளுக்காக-உலகமெல்லாம் பரந்து வாழும்-இப்பாடசாலையில் கல்விபயின்ற பழைய மாணவர்களிடம் உரிமையோடு நிதியுதவிகோரி நிற்பதாக,பாடசாலை நிர்வாகம்,அல்லையூர் இணையத்தின் ஊடாக வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீண்டகாலமாக புனரமைப்பு பணிகள் செய்யப்படாதுள்ளதனால்,இப்பாடசாலையின் வகுப்பறைகள் மற்றும் சுவர்கள் மோசமாக பழுதடைந்திருப்பதனை கீழே உள்ள படங்களில் காணலாம்.
இப்பாடசாலையில் பெரும்பாலான ஏழை மாணவர்களே கல்வி பயின்று வரும் நிலையில்,அவர்களின் நலன் கருதி,பாடசாலையினை புனரமைத்து கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டிய பாரிய பொறுப்பு-புலம்பெயர்ந்து வாழும் இப்பாடசாலையின் பழைய மாணவர்களிடமேயுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திருத்தப்பணிகளை,இப்பாடசாலையின் பழைய மாணவியும், அல்லைப்பிட்டி தபால் அதிபரும், சமாதான நீதவானுமாகிய,அமரர்கள் திரு.திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் புதல்வியுமான , திருமதி ஸ்ரீரங்கநாயகி (றங்கம்) ஜெயகோபால் அவர்கள் முன்னின்று செயற்படுத்தி வருகின்றார்.
இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் அனைவரும்-இப்பணிக்கு உதவிட முன்வருமாறு நாமும் பணிவுடன் வேண்டி நிற்கின்றோம்.
தொடர்புகளுக்கு…….
அதிபர் -(பராசக்தி வித்தியாலம்)-0094213202342
திருமதி ஸ்ரீரங்கநாயகி (றங்கம்) ஜெயகோபால்-0033651959906