திருகோணமலை நிலாவெளி  குளத்தில் பலியாகிய ஐவரின் சடலங்களும் ஒரே குழியில் அடக்கம்-படங்கள் இணைப்பு!

திருகோணமலை நிலாவெளி குளத்தில் பலியாகிய ஐவரின் சடலங்களும் ஒரே குழியில் அடக்கம்-படங்கள் இணைப்பு!

தாமரைப் பூப்பறிக்கச் சென்றபொழுது தோணி கவிழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்த ஐவரின் சடலங்களும் கடந்த திங்கட்கிழமை ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டது.

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள பெரியகுளத்திற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை   தாமரைப் பூப்பறிக்கச் சென்றவர்களின் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர்கள் மற்றும் தோணி வலிப்பவர் உட்பட ஐவர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள குளத்திற்குச் சென்று பொங்கி வழிபட்டு பொழுதைக் கழிக்கச் சென்றவர்களே இவ்வாறு உயிரிழந்தனர்.

நிலாவெளி 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களான சுரேஸ் கேசிக்ராஜ் (வயது 9) சுரேஸ் யுதேஸன் (வயது 7), சுகந்தன் பிரணவி (வயது 7), தங்கத்துரை சங்கவி (வயது 9) மற்றும் தோணியை ஓட்டிச் சென்ற தருமலிங்கம் தங்கத்துரை (வயது 32) ஆகியோரே உயிரிழந்தவராவார்கள்.

இறுதிச் சடங்கு நிகழ்வில் அஞ்சலி செலுத்துவதற்காக கிராம பொதுமக்கள், அனுதாபிகள் என அதிக எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply