யாழ் தீவகத்தில்,முழுமையாக வீதிமின் விளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக அல்லைப்பிட்டி-பிரத்தியேக நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில்,முழுமையாக வீதிமின் விளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக அல்லைப்பிட்டி-பிரத்தியேக நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவக கிராமங்களில் ஒன்றான, அல்லைப்பிட்டிக் கிராமத்தின் பிரதான வீதிகள் அனைத்துக்கும்,முழுமையாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இருளில் மூழ்கிக்கிடந்த, எங்கள் கிராமத்திற்கு  மின் விளக்குகள் பொருத்தப்பட்டது மகிழ்ச்சியான செய்தியாகும்.

தற்போது அல்லைப்பிட்டியின் பிரதான வீதிகள் அனைத்திலும்  மின் விளக்குகள் பிரகாசிக்கின்றன.

அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் முருகன் கோவில்வரையும்-அல்லைப்பிட்டி தெற்கு கடற்கரை  வரையும்-அல்லைப்பிட்டி மேற்கு அந்தோனியார் சுருவம் வரையும்-அல்லைப்பிட்டி வடக்கு பிரதான சந்திவரையும்  மின்விளக்குகள் முழுமையாகப் பொருத்தப்பட்டு தற்போது ஒளிர்கின்றன. 

ஒரு மின் விளக்குப் பொருத்துவதற்கு மின்சாரசபை ஊழியரின்  கூலி மற்றும் மின்குமிழ் உட்பட 5.000 ஆயிரம் ரூபா முடிகின்றது என்றும் -100 மின் விளக்குகள் தற்போது பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.

அல்லைப்பிட்டியின் பிரதான  வீதிகள் அனைத்திற்கும்-  மின்விளக்குகளை பொருத்துவதற்கு -அல்லைப்பிட்டியில் பெயருடனும் புகழுடனும் வாழ்ந்து மறைந்த, அமரர் வைத்திலிங்கம் செல்லத்துரை (உடையார்) அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் ஆகியோர் ஒன்றிணைந்து  நிதியுதவி  வழங்கியுள்ளதாக-  இப்பொதுச்சேவையினை முன்னெடுத்தது சிறப்பாக  செயற்படுத்தியவரான – அல்லைப்பிட்டி தபால் அதிபரும், சமாதான நீதவானுமாகிய,அமரர்கள்  திரு.திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதிகளின் புதல்வி  ஸ்ரீரங்கநாயகி (றங்கம்) ஜெயகோபால் அவர்கள்  எமது இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

தீவக கிராமங்களில்,முழுமையான வீதிவிளக்குகள் பொருத்தப்பட்ட கிராமமாக,அல்லைப்பிட்டிக்கிராமமே விளங்குவதாக மேலும் அறியமுடிகின்றது.அல்லைப்பிட்டியைத் தொடர்ந்து வேலணைக்கும், மின்விளக்குகள் முழுமையாகப் பொருத்தும்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux