தீவகம் அல்லைப்பிட்டியில் சர்வதேச ஆங்கிலப்பாடசாலை, யாழ் ஆயர் அடிக்கல் நாட்டினார் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் அல்லைப்பிட்டியில் சர்வதேச ஆங்கிலப்பாடசாலை, யாழ் ஆயர் அடிக்கல் நாட்டினார் -படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகம் அல்லைப்பிட்டியில் அமைக்கப்படவுள்ள, சர்வதேச ஆங்கிலப் பாடசாலைக்கான,  அடிக்கல் நாட்டிய நிகழ்வு-  யாழ். மறை மாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் தலைமையில் 01.03.2018 வியாழக்கிழமை மாலை  இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தீவக மறைக்கோட்ட குருமுதல்வரும்,மண்டைதீவு- அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்பணி மனுவேற்பிள்ளை டேவிட் அடிகளார் உட்பட பல கத்தோலிக்க மதகுருமார்களும், அல்லைப்பிட்டி மக்களும் கலந்து கொண்டதாக மேலும் தெரியவருகின்றது.

இப்பாடசாலை அமைப்பதற்கான பணிகளை முன்னெடுப்பதற்காக, தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த கத்தோலிக்க மதகுருமார்கள் பலர்- அல்லைப்பிட்டியில் தங்கியிருப்பதாக மேலும் அறியமுடிகின்றது.

இவர்கள் தங்கியிருந்து பணிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக, அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள தனது இல்லத்தை வழங்கிவிட்டு-கொழும்புக்குச் சென்றுவிட்டாராம்-பெரியவர் அல்பிரட் யோர்ச் அவர்கள் என்று பிறிதொரு  செய்தி தெரிவிக்கின்றது.

யாழ் தீவகத்தில் அமையவுள்ள இப்பாடசாலைக்கு, யாழ் மாவட்டத்தின் இதரபகுதிகளிலிருந்தும் பெருமளவான மாணவர்கள் கல்விகற்கமுன்வருவார்கள் என்று மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux