அல்லைப்பிட்டியைச் சேர்ந்த-திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் 17-10-2013 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்-அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 18-10-2013 வெள்ளிக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றன.அல்லையூர் இணையத்தின் நிழற்படப்பிடிப்பாளரினால் பதிவு செய்யப்பட்ட-நிழற்படங்களை உங்களின் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த- திருமதி சங்கரப்பிள்ளை ஞானாம்பிகை அவர்கள் (17.10.2013) வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம் சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ் சென்றவர்களான இராசமணி மாணிக்கம் தம்பதியினரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை யின் பாசமிகு மனைவியும், காலஞ்சென்ற சிவஞானம், சங்கமதி மற்றும் ஞானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், சண்முகலிங்கம் மற்றும் அமிர்தலிங்கம், அருள்நாயகி, வரதலிங்கம், தனபாலு, ஞானலிங்கம், யோகநாயகி, விமலதாசன் காலஞ்சென்ற சிவகாந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும் பகவதி, மகேஸ்வரி, காலஞ்சென்ற புவனநாதன், சிவானந்தி, ஜெயமணி, சுகந்தணி, முரளீஸ்வரன் (பிரான்ஸ்), சத்தியரூபி, கிருஸ்னேஸ்வரன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்றவர்களான யோகம்மா, ராசையா, கணபதிப்பிள்ளை மற்றும் செல்லம்மா ஆகியோரின் மைத்துனியும் பானுமதி, சந்திரமதி, குமரன், வரதலட்சுமி, யோகலட்சுமி, விமலசூரியன் ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (18.10.2013) வெள்ளிக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று பி.ப ஒரு மணியளவில் அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இந்த அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
|
மேலதிக தொடர்புகளுக்குமகன்-ஞானலிங்கம் பிரான்ஸ்-0033605735846 |
லங்காசிறி இணையத்திலிருந்து-அல்லையூர் இணையத்திற்கு நேரடி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதனை-உங்கள் நண்பர்களிடம் தெரிவிக்கவும்.