தீவகத்தில் பல தடவைகள் தாக்குதலுக்குள்ளாகிய மண்டைதீவு வழிப்பிள்ளையாரின் தற்போதைய தோற்றம்-படங்கள் இணைப்பு!

தீவகத்தில் பல தடவைகள் தாக்குதலுக்குள்ளாகிய மண்டைதீவு வழிப்பிள்ளையாரின் தற்போதைய தோற்றம்-படங்கள் இணைப்பு!

இலங்கையின் வடகிழக்கில் தொடர்ச்சியாக  கடவுள் சிலைகளை உடைத்து அழிக்கும் செயற்பாடுகள்  இனந்தெரியாதவர்களால் திட்டமிட்டரீதியில்  மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னரும்-யாழ் செம்மணி வீதியில் அமைந்திருந்த பிள்ளையார்  சிலை அடித்து நொருக்கப்பட்ட காட்சிகள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.

இதேபோல் தீவகம் மண்டைதீவு பிரதான வீதியில்  அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் வழிப்பிள்ளையாரின் மீதும் பல தடவைகள்  விஷமிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.

ஒரு கட்டத்தில் வழிப்பிள்ளையாரை முழுமையாக அகற்றுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.

இதற்குப்பின்னால் பல காரணங்கள் கூறப்பட்டாலும்-அவற்றையெல்லாம்  பின்தள்ளி மீண்டும் அதேயிடத்தில் கம்பீரமாக கோவில் கொண்டு அருள்பாலித்து வருகின்றார் மண்டைதீவு வழிப்பிள்ளையார்.

அண்மையில் எமது இணையத்தினால், மண்டைதீவில்    பதிவு செய்யப்பட்ட சில நிழற்படங்களை கீழே இணைத்துள்ளோம்.

Leave a Reply