வேலணையைச் சேர்ந்த,அமரர் சிவநாதன் அன்பரசி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

வேலணையைச் சேர்ந்த,அமரர் சிவநாதன் அன்பரசி அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளரும்-நிழற்படப்பிடிப்பாளருமாகிய,திரு இ.சிவநாதன் அவர்களின் அன்பு மகளும், கிளிநொச்சி மத்திய கல்லூரியின் 2009ம் வருடத்தின் தரம்8 வகுப்பு மாணவியுமான- அமரர் செல்வி அன்பரசி(பிரியா) சிவநாதன் அவர்களின் 9ம் ஆண்டு நினைவு நாள் 16.02.2018 வெள்ளிக்கிழமை இன்றாகும்.

அமரர் சிவநாதன் அன்பரசியின் நினைவுதினத்தை முன்னிட்டு-வன்னேரிக்குளத்தில் அமைந்துள்ள யோகர்சுவாமிகள்  முதியோர் இல்ல முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.

அன்பு மகளே.பிரியா………..

சிரித்த உன்முகம்
சிந்தையில் நிழலாடுது
வசிகர கதைகளால் 
வரவேற்கும் உன் பண்பு
எல்லோர் மனதையும் 
அன்பாள் ஆண்ட 
புண்ணகை அரசியே
உன்பெயரும் அன்பரசி
உன்உருவமும் அன்புருவம்
வன்னி மண்னெங்கும் ஆடிய
உன் ஆடல்கலைகள் எங்கே
பேச்சாற்றலால் 
சபையினையே 
ஆட்டிப்படைத்த 
அந்த உருவமெங்கே
பதுக்குடியிருப்பில்
விழுந்த எறிகணை
உன் ஆத்மாவை 
இளைப்பாற வைத்ததே
இதே நாள் ஒன்றில்
உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனிடம் வேண்டுகின்றோம்.

இதே நாளில் எமது மகளுடன் எறிகணை வீச்சால் சாவடைந்த 17தமிழ் உறவுகளின் ஆத்மா சாந்தி பெற இறைவனிடம் வேண்டுகின்றோம்..
ஓம் சாந்தி!  ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!

(குடும்பத்தினர்-வேலணை)

Leave a Reply