இந்துக்களின் புனிதநாளான மகாசிவராத்திரி தினத்தில் பசுவதைக் கொடுமை!நாரந்தனை கிழக்கில் சம்பவம்!

இந்துக்களின் புனிதநாளான மகாசிவராத்திரி தினத்தில் பசுவதைக் கொடுமை!நாரந்தனை கிழக்கில் சம்பவம்!

மகாசிவராத்தி தினமான இன்று வேலணை நாரந்தனைப் பகுதியில் பசுமாடுகளை கொடுமைப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

வேலணைப் பிரதேச செயலகம், வேலணைப் பிரதேச சபை என்பவற்றின் அனுமதியுடன் கட்டாக்காலி மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் இளைஞர்கள் இந்தக் கொடூரத்தில் ஈடுபட்டதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

நாரந்தனை கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகே பிரதான வீதியில் தெற்குப் புறமாகச் செல்லும் ஒழுங்கையில் பெரிய கூடாரவடிவிலான , நைலோன் கயிற்றிலான மாடுகளைப் பிடிக்கும் வலையைக்கட்டி,மாடுகளை ஒழுங்கைப் பக்கமாக விரட்டி அகப்படும் மாடுகளின்  நான்கு கால்களையும் ஒன்றாக மடக்கிக்கட்டி சித்திர வதை புரிந்து லான்ட்மாஸ்ரரில்  மாடுகளை  ஏற்றிக்கொண்டு வேலணை மேற்கில் மாடுகள் கட்டப்படும் இடத்திற்கு ஏற்றிச் செல்கிறார்கள் என்று நேரில் கண்ட சமூக ஆர்வலர்கள் ஆவேசத்துடன் தெரியப்படுத்தியுள்ளார்கள்.

கன்றுத் தாய்ச்சி மாடுகளின் நான்கு கால்களையும் மடக்கிக் கட்டி லான்ட்மாஸ்ரரில் ஏற்றும் போது அவைகள் எப்படி வருத்தப்படும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்.

இவர்கள்  சட்டதிட்டங்களை மதியாமல் ஒருதலைப்பட்சமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. மாடுகளை வாங்கி இன்னோர் இடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமானால், லான்ட் மாஸ்ரரில் ஏற்றிச் செல்ல சட்டம் அனுமதிக்காது. அடைத்த மூடிய வாகனத்தை பிரதேச மிருகவைத்தியரிடம் காட்டி , உரிய அனுமதிப் பத்திரம் பெற்று, அந்த அனுமதியை பிரதேச செயலரிடம் காட்டி மாடுகளைக் கொண்டு செல்வதற்கான வழித்தட அனுமதியைப் பெறவேண்டும்.
இந்த நடைமுறை ஒன்றும் இல்லாமல் மாடுகளின் நாலுகால்களையும் கூட்டிக் கட்டி சித்திர வதை செய்து , கொண்டு செல்ல இந்த மாடுபிடிகாரர்களுக்கு அனுமதி வழங்கியது யார்?என்ற கேள்வியும் மக்களால் முன்வைக்கப்படுகின்றது.

சட்டம் ஒழுங்கைப் பேணும் அதிகாரிகள் இதைக் கவனத்தில் எடுப்பார்களா? மிருவதையை எதிர்த்து , பசுமாடுகளை நேசிப்பவர்கள் இதைக் கவனத்தில் எடுக்கவேண்டும்.என்பதே எமது வேண்டுகோளாகும்.

புங்குடுதீவிலும், தீவகத்திலும்  தொடர்ச்சியா மாடுகளைக் கொன்று கடத்தி வரும் கும்பல்கள் பெருகிக்காணப்பட்டன. சமூக ஆர்வலர்கள் பலமுறை கையும் களவுமாக சில மாடு கடத்துபவர்களை காவல்துறைக்கு இனம் காட்டிய போதும் முக்கிய கடத்தல்காரர்களை கையும் களவுமாக பிடிக்க முடியவில்லை. இதற்காக ஒரு தன்னார்வ குழு ஒப்ரசேன் K எனும் திட்டத்தோடு, அரச காவல்துறை உளவாளிகளின் உதவியோடு களம் இறங்கியது.

கடந்த இரண்டுமாதமாக கடத்துபவர்கள் கண்கானிக்கப்பட்டு அவர்களது திட்டமான உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பான மாடு கடத்தும் திட்டம் அறியப்பட்டு, புங்குடுதீவு தொடங்கி யாழ் பண்ணைவரை இருபதிற்கும் மேற்பட்ட தீவக இளைஞர்களும், பத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினரும் களத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர். தம்மை சுற்றி என்ன நடக்கிறது எனப்புரியாத கும்பல் பிடித்த மாடுகளை வாகனத்தில் ஏற்றத்தொடங்கினார்கள். அவர்கள் வெளிக்கிடத் தொடங்கியதும் தகவலை அரனில் நின்றவர்களிடம் வழங்கிவிட்டு கண்காணிப்பு குழ பின்தொடர்ந்தது. திட்டத்தின் படி பண்ணையில் மறிக்க திணறியடித்துக் கொண்டு தங்களது இருப்பிடமான ஐந்துமூலச்சந்தியை நோக்கி விரைந்தார்கள் அங்கு ஏற்கனவே கண்காணிப்பு குழு பதுங்கியிருந்தமை தெரியாமல். உள்ளே சென்றவர்கள் தப்பித்தோம் என்ற பூரிப்பல் சிறிது நேரத்தில் மாட்டை வெட்ட வெளிக்கிட்டனர. உள்ளே புகுந்த கண்காணிப்புகுழு மாடு வெட்டிக்கொண்டிருந்த முஸ்லீம் இளைஞரையும், அங்கு நின்றவர்களையும் மடக்கி பிடிக்க வருகை தந்த காவல்துறை அவர்களை கைது செய்தது.

இவர்களிற்கு மாட்டை பிடித்து கொடுத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இத்திட்டத்தில் ஒருங்கிணைந்து செயற்பட்ட தீவக சமூக அக்கறை கொண்ட இளைஞர்களிற்கும், உளவுத்துறை அதிகாரிகளிற்கும் தீவக மக்களும் சமூகஆர்வலர்களும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரியப்படுத்துகின்றனர் .

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux