தீவகத்தில் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய சிறுபார்வை- முழு விபரங்கள் இணைப்பு!

தீவகத்தில் உள்ளூராட்சிசபை தேர்தல் பற்றிய சிறுபார்வை- முழு விபரங்கள் இணைப்பு!

இலங்கையில் நடந்துமுடிந்த,உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்-தீவகத்தில் செயற்படும்  மூன்று பிரதேசசபைகளான,வேலணை,ஊர்காவற்றுறை,நெடுந்தீவு  ஆகியவற்றில் வெற்றிபெற்ற கட்சிகளின் விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

இம்மூன்று பிரதேசசபைகளில் இரண்டில் ஈ.பி.டி.பி கட்சி வெற்றிபெற-வேலணை பிரதேசசபையில் த.தே.கூட்டமைப்பு எட்டு ஆசனங்களைப்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டமைப்பு  தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊர்காவற்றுறையில்  ஈ.பி.டி.பி கட்சி தனித்து ஆட்சியமைக்க முடியும் எனவும்-நெடுந்தீவில் நிலமை மாறுபடலாம் என்றும் அறிய முடிகின்றது.

மண்டைதீவு,அல்லைப்பிட்டி,மண்கும்பான் ஆகிய மூன்று கிராமங்களிலும்-கூட்டமைப்பின் வேட்பாளர்களே வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விகிதாசார ரீதியில் மேலும் ஒரு பெண் உறுப்பினர் கூட்டமைப்பின் சார்பில் மண்டைதீவிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்-என்று மேலும் தெரிய வருகின்றது.

உள்ளூராட்சி சபை தேர்தல் அல்லைப்பிட்டி வட்டாரத்தின் தேர்தல் முடிவு

அல்லைபிட்டியில் உள்ளூராட்சி சபை தேர்தலில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி வெற்றி பெற்றுள்ளது.
1.இலங்கை தமிழ் அரசு கட்சி 325
2.ஈழமக்கள் ஜனநாயக கட்சி 304
3.ஐக்கிய தேசிய கட்சி 69
4.ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி 52
5.அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 48
6. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 32
7.அகில இலங்கை தமிழர் மகாசபை 09
8.தமிழ் விடுதலை கூட்டணி 05

Leave a Reply