புங்குடுதீவில்,  கடற்படையினரின் பவள்கவசவாகனம் மோதி றோமன்.கத்தோலிக்க வித்தியாலய மாணவி பலி-விபரங்கள் இணைப்பு!

புங்குடுதீவில், கடற்படையினரின் பவள்கவசவாகனம் மோதி றோமன்.கத்தோலிக்க வித்தியாலய மாணவி பலி-விபரங்கள் இணைப்பு!

 

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் கடற்படையின் பவள் கவசவாகனம் மோதியதில் பாடசாலை சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சம்பவம் இன்று(24.01.2018) திங்கள் காலை 7:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஊர்காவற்துறை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி புங்குடுதீவு பகுதியினை சேர்ந்த,புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் கல்வி பயிலும்- திருவானந்தன் கேசனா வயது(09) என பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த  சிறுமி தனது மாமாவுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த போதே விபத்து நடந்ததாக தெரிய வருகின்றது.

இதன் போது எதிர்திசையில் வந்த கடற்படையின் வாகனம் மோதியதால் சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மாமன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

40வயதுடைய சபேஸ்வரன் என்ற மாமன் முறையிலான உறவினர் ஒருவரே காயமடைந்துள்ளார். உயிரிழந்த சிறுமியின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படையின் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனமும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் தற்சமயம் 4200 மக்களே வாழ்ந்துவருகின்ற நிலையில் 267 கடற்படையினரோடு ஆறு கடற்படை முகாம்கள் காணப்படுகின்றன .

இவற்றினை குறைந்தபட்சம் இரண்டாக குறைக்கவேண்டுமென்று பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவத்தை தொடர்ந்து புங்குடுதீவில் பதட்டநிலை காணப்படுவதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux