அல்லையூர் இணையம் ஆறாவது தடவையாக,கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள்  இல்ல மாணவர்களுக்காக,நடத்திய தைப்பொங்கல் விழா-படங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் ஆறாவது தடவையாக,கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் இல்ல மாணவர்களுக்காக,நடத்திய தைப்பொங்கல் விழா-படங்கள் இணைப்பு!

கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்காக,ஆறாவது தடவையாக தைப்பொங்கல் விழாவினை -அல்லையூர் இணையம் தனது அறப்பணிக்குடும்பத்தினருடன் இணைந்து வெகு சிறப்பாக நடத்தியது.

 கடந்த ஜந்து வருடங்களாக, அல்லையூர் இணையத்தின் ஊடாக,  புலம்பெயர் நாடுகளில் வாழும் கருணையுள்ளவர்களிடம் தைப்பொங்கலுக்காகத்  திரட்டிய நிதியினை  மகாதேவா மாணவர்களின் கல்விக்காக வழங்கிவந்தோம்.

இந்த வருடம்-அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தில் கல்விப்பணியாற்றி ஓய்வு பெற்ற-ஆசிரியை,திருமதி புவனேஸ்வரியம்மா சோமசுந்தரேசன் அவர்களின் புதல்வர் லண்டனில் வசிக்கும்-திரு பாலன்சேதுபதி சோமசுந்தரேசன் அவர்கள் 50 ஆயிரம் ரூபாக்களை அல்லையூர் இணையத்தின் ஊடாக,மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லப் பொங்கல் விழாவிற்காக வழங்கியிருந்தார்.அவருக்கு எமது நன்றியினை  தெரிவித்துக் கொள்கின்றோம்.

வழமைபோல மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தில் சிறப்பாக 14.01.2018 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற,தைப்பொங்கல் விழாவில்- அல்லையூர் இணைய  அறப்பணிக்குடும்பத்தின் சார்பில் திரு இ.சிவநாதன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இல்லத்தலைவர் திரு நித்தியானந்தன் அவர்களின்  தலைமையில்,மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux