அல்லையூர் இணையத்தின் தைப்பொங்கல் வாழ்த்துப்பா.. இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் தைப்பொங்கல் வாழ்த்துப்பா.. இணைப்பு!

அல்லையூர் இணையத்தின் சார்பில்-அனைவருக்கும்,இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அறப்பணி ஒன்றையே முதற்பணியாகக் கொண்டு இயங்கி வரும் -அல்லையூர் இணையத்தின் தொடர் அறப்பணிச் சேவைக்கு-உங்கள் பேராதரவினை தொடர்ந்து வழங்க முன் வருமாறு பணிவுடனும்,அன்புடனும், உரிமையுடனும் வேண்டி  நிற்கின்றோம்.

மங்களம் நிறையும் பொங்கல்…

கங்குல் விலகிட கதிரவன் எழுந்தான்
கலைகள் பிறந்திட இசையில் நிறைந்திட
திங்கள் கதிரொளி தேனிசை பொழிந்திட
தீந்தமிழ் வளங்கள் கதிரொளி பொழிந்திட
மங்களம் பொங்கும் மரகதம் ஒளிவிட
மாணிக்க சம்பா நெல் பொலிந்திட
பொங்கல் மகிமையில் பூரித்து மனமெழ
பாரினில் உழவர் கரங்கள் பலம்பெற
எங்கும் உழவர் திருநாள் மகிழ்வு
எதிலும் பொங்கல் மகிமை நிறைவு

உழவர் கரங்கள் மகிமை பெற்றிட
உழுதுண்ணும் வாழ்வு மண்ணில் நிறைவுற
எழுச்சியில் மனிதம் தலை நிமிர்ந்திட
ஏதிலி வாழ்வு மண்விட்டு மறைந்திட
ஒழுக்கம் ஒப்புரவு மனதில் வளர்ந்திட 
ஒத்திகை வாக்குறுதிகள் மாற்றமடைய
வழுவா நெறிகள் மண்ணில் மலர்ந்திட
வாழ்வில் இறைவா இரங்கியருள்வாய்

வேதங்கள் சொல்லும் வழிப்படி நடக்க
வாதுகள் வம்புகள் வரையடங்கி போயிட
அதர்மம் அழிந்து அறம் மேலோங்க
அன்பும் பண்பும் ஆழமாய் பொலிவுற

உதவாக் கொள்கைகள் மண்ணில் நீங்கிட
உலகில் நின்மதி வாழ்வு மலர்ந்திட
எதையும் தாங்கும் இதயமாய் வாழ்வோம்
எல்லா மனமும் மகிழ்வுற வாழ்வோம்
பொங்கல் மகிமை புத்துயிர் தரட்டும்
மங்களம் இறைவன் துணையில் வாழ்வோம்

ஆக்கம் – அமரர் கவிஞர் பாலன் சேவியர்
அல்லைப்பிட்டி

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux