இலங்கையில்,மிக நீளமான மேம்பாலம் இன்று திங்கட்கிழமை திறந்துவைப்பு-படங்கள் இணைப்பு!

இலங்கையில்,மிக நீளமான மேம்பாலம் இன்று திங்கட்கிழமை திறந்துவைப்பு-படங்கள் இணைப்பு!

இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள மிக நீளமான மேம்பாலமான இராஜகிரிய மேம்பாலம் இன்று (08) காலை திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் இந்த பாலம் திறந்து வைக்கப்பட்டது.

534 மீற்றர் நீளம், 21.4 மீற்றர் அகலம் கொண்ட நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணத்திற்கு, ரூபா 4,700 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

இராஜகிரிய மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியில் நிலவும் வாகன நெரிசலுக்கு தீர்வாக இது அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இன்று (08) நல்லாட்சி அரசு நிறுவப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply