அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 324 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
பிரான்ஸில் வசிக்கும்-மண்கும்பானைச் சேர்ந்த, திரு சாந்தலிங்கம் சித்ராங்கன் அவர்களின் 28 வது பிறந்த நாளை முன்னிட்டு-05.01.2018 வெள்ளிக்கிழமை இன்று சமூகசேவை உத்தியோகத்தர் திரு செல்லத்துரை ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில்-வவுனியாவில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்ல முதியவர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது.
திரு எஸ். சித்ராங்கன் அவர்கள்-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி வீரகத்தி விநாயகர் அருனால், வாழ்வில் எல்லாச் செல்வங்களும் பெற்று மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம்.