புதுவருடத்தில்,ஆதரவற்ற மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களும்,சிறப்புணவும் வழங்கிய அல்லையூர் இணையம்-விபரங்கள் இணைப்பு!

புதுவருடத்தில்,ஆதரவற்ற மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களும்,சிறப்புணவும் வழங்கிய அல்லையூர் இணையம்-விபரங்கள் இணைப்பு!

அல்லையூர் இணையம் 01.01. 2018 புத்தாண்டு தினத்தன்று 65 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியான கற்றல் உபகரணங்களை-அம்பாறையில் அமைந்துள்ள ,அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு வழங்கி வைத்தது.அத்தோடு அன்றைய தினம் மாணவிகளுக்கு- தீவகம் வேலணை மேற்கைச் சேர்ந்த,அமரர் பரமலிங்கம் பகவத்சிங்கம் அவர்களின் நினைவாக-ஒருநாள் சிறப்புணவும் வழங்கப்பட்டது.

இச்சிறப்பு நிகழ்வில் அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த,திரு இ.சிவநாதன் அவர்கள் நேரடியாகச் சென்று கலந்து கொண்டார்

கற்றல் உபகரணங்களுக்கான நிதியினை-மண்டைதீவைச் சேர்ந்த,திரு நிர்மலநாதன் மற்றும் மண்கும்பானைச் சேர்ந்த,திருமதி திலகா மகேந்திரன் அவர்களும்- அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, திருமதி நகுலன் சுகிர்தராணி அவர்களும் வழங்கியிருந்தனர்.

இவர்களுக்கு,அம்பாறை அம்மன் இல்ல மாணவிகளின் சார்பிலும்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux