அன்னை சிரோன்மணி தில்லைநாதன் அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இம்முறை-அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள-வாகீசர் சனசமுக நிலைய மண்டபத்தில் புதன்கிழமை மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.இன்நிகழ்வில் அன்னாரின் நிழற்படத்திற்கு-மூத்த புதல்வர் திரு பத்மநாதன் அவர்கள் மலர்மாலை அணிவித்து விளக்கேற்றினார்-அதனைத்தொடர்ந்து பிரார்த்தனை நிகழ்வு இடம்பெற்றது-அதன் பின் மாலை நேர வகுப்பு மாணவர்களுக்கு-அன்னாரின் நினைவாக -கொப்பிகள் அடங்கிய-புத்தகப்பை வழங்கப்பட்டது-அதனைத் தொடர்ந்து சிற்றுண்டி வழங்கப்பட்டது.இன்நிகழ்வில் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்கள் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.
மேலதிக சிறப்பாக-அன்னாரின் உறவினரான திருமதி தருமலிங்கம் பூபதியம்மா அவர்கள் இன் நிகழ்வில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கியது மேலும் சிறப்பாகவிருந்தது.