நத்தார் தினத்தன்று மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

நத்தார் தினத்தன்று மூன்று இடங்களில் சிறப்புணவு வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யேசுபாலன் பிறந்த தினமான நத்தார் பெருநாள் அன்று-கருணை உள்ளங்களின் நிதி அனுசரணையில் தாயகத்தில்  ஆதரவற்ற மாணவர்கள்,முதியோர்களுக்கு சிறப்புணவு வழங்கப்பட்டது. அல்லையூர் இணையம் தாயகத்தில் முன்னெடுத்து வரும்-“ஆயிரம் (1000)தடவைகள் அன்னதானம்”என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் தொடர்ச்சியாக 318 வது தடவையாக,இச்சிறப்புணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

விபரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு-01

ஜெர்மனியில் வசிக்கும்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு எ.ஜேசுதாஸ் அவர்களின் நிதி அனுசரணையில்-நத்தார் பெருநாளை முன்னிட்டு 25.12.2017 திங்கட்கிழமை அன்று வவுனியா சிவன் இல்ல முதியோர்களுக்கு வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் திரு செல்லத்துரை ஸ்ரீனிவாசன் அவர்களின் தலைமையில் சிறப்புணவு வழங்கப்பட்டது.

நிகழ்வு-02

பிரான்ஸில் காலமான,யாழ் நாவாந்துறையைச் சேர்ந்த,அமரர் அந்தோனிப்பிள்ளை தேவதாஸ் அவர்களின் ஞாபகார்த்தமாக,(25.12.2017) திங்கட்கிழமை அன்று நத்தார் பெருநாளை முன்னிட்டு-மன்னார் பேசாலை துள்ளுக்குடியிருப்பில் அமைந்துள்ள இரங்கும் செபமாலை இல்ல மாணவிகளுக்கு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில் ஒருநாள் சிறப்புணவு வழங்கப்பட்டது.

நிகழ்வு-03

நத்தார் பெருநாளை முன்னிட்டு-லண்டனில் அமைந்துள்ள Pimlico shopper அனுசரணையில் -25.12.2017 அன்று கிளிநோச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux