ஒளி உன்னைத் தேடி வரும்.
ஏசுவின் பிறப்பு உங்களுக்கு இனிமையான இதயத்தை உருவாக்கட்டும்
(இதை முழுமையாகப் படிப்பவர்கள் பாக்கியவான்கள்)
ஒளி பிறந்தது உலகம் பிறந்தது
யேசு பிறந்தார் மீண்டும் ஒளி தெரிந்தது
அதிசயிக்க ஒரு வால்வெள்ளி தோன்றியது
அது வழிகாட்டியா வால்வெள்ளியா
மன்னர்கள் பின் தொடர்ந்தார்கள்
மனதில் ஒரு ஆட்சரியம், ஆராந்தார்கள் அந்த மூன்று ராஜாக்கள்
தேடுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும் என்பது போல் …….
புறப்பட்டார்கள் அவர்கள் இலட்சிய இடத்தை நோக்கி……….சென்றடைந்தார்கள்
யேசு பாலனை மூராஜாக்கள் கண்டு கொண்டனர். – இது முயற்சியின் ஒளி
வால்வெள்ளி வானத்தில் நின்று ஒளி கொடுத்தது
அது ஒரு செய்தியை சொல்ல வழிகாட்டியது.
நல்ல அரசர்களும் உண்டு என்பதை அறிய முடிந்தது
இறைவன் யேசுவின் பிறப்பை இவ்வாறு அறிவிக்கின்றார்.
யேசு பிறந்ததும் அவரைத்தேடி மூராஜாக்கள் பின் தொடர்ந்தார்கள்
வாழும் போதும் 12 சீடர்கள் அவரைப் பின் தொடர்ந்தார்கள்
அவர் வானுலகம் சென்றதும் மக்கள் அவர்வழி பின் தொடர்கின்றார்கள்
நீயும் இதை ஏன் சிந்திக்கவில்லை, சிந்தி மனிதா – இது தேடலின் ஒளி
அன்னை திரோசா ஏன் நோயாளிகளை நேசித்தார் – அவர் மனித தெய்வம்
நீ யார் என இன்னும் அறியவில்லையா, இரக்கமில்லா, சுயநலமான மனிதன் நீ
உனது மகிழ்ச்சி, மரணம் வரைக்கும் தான்,
அன்னை திரோசா அம்மையார் அவர்கள் மரணத்தின் பின்னரும்
பூ உலகிலும் மறை உலகிலும் மகிழ்வாக இருப்பார்
நீயும் அல்லையூர் இணையம் போல் மாறிவிடு
உன் கரங்களை புனிதப்படுத்தி இதயத்தை தூய்மையாக்கிக் கொள்
மாறிவிடு இன்றே உன் மனதை மாற்றிவிடு,
யேசு போல் உன் மனம் உயிர்தெழட்டும் – இது அன்பின் ஒளி
பிறப்பிலும், வாழ்விலும், மறைவிலும் உன்னை மற்றவர் பின்தொடர
நீ பாக்கியம் செய்தவனாக இரு
பிறருக்காக வாழு, பிறரை நேசி, பிறருக்காக உதவு, பிறருக்காக அரசிடம் வாதிடு
இப்படி வாழ்ந்தவர் தான் யேசு
அவர் பிறப்பின் நினைவு எம்மை மகிமைப்படுத்தட்டும் – இது அரசியல் ஒளி
தாய் தந்தை உறவு என நாமும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நாம் எமக்காகவே வாழ்கின்றோம், எமது குடும்பங்களுக்காகவே வாழ்கின்றோம்
தமிழ் இனம் என்பது அவர்கள் பண்பாட்டில் குடும்ப நலம் என்பது அதிகம் – ஆனால்,
வெளிநாட்டவரின் வாழ்க்கை முறையைப் பார்த்த நாம் எமக்காக வாழ முற்படுகின்றோம்.
போர் இல்லாது எமது சமுதாயம் புலம் பெயர்ந்திருந்தால் பறவாயில்லை
பசி பட்டினி, துன்ப துயரம் இல்லாதிருந்தால் பறவாயில்லை
அமைதி, நின்மதி பாதுகாப்பு நிறைந்திருந்தால் பறவாயில்லை
படும் துயரம் புரியாது, இருப்பது இரக்கமுள்ள இதயம் உனக்கில்லை என்பதே வெளிச்சம்
உதவி செய்ய உனக்குத் துணிவில்லை,
உனக்கும் இதயம் உண்டு என்பதை உணரு. – இது இதயத்தின் ஒளி
துணிவு, இரக்கத்தை தந்துவிடும்
அறிவு அன்பைத் தந்துவிடும்
பண்பு மனித நேயத்தை தந்துவிடும்
நீ செய்யும் உதவி உனக்கு மோட்சத்தை தந்துவிடும்
இவ்வுலக வாழ்வில் நிறைவான மகிழ்ச்சியைத் தந்துவிடும் – இது மோட்சத்தின் ஒளி
நாம் பல உயிர்களை, உடமைகளை, உரிமைகளை இழந்து வந்ததால்
உன்னைப்போல் பிறரை நேசி என்பது முக்கியமானதாகிறது.
தமிழரின் மனதில் பட்சாத்தாபமில்லாது போய்விட்டது
அவர்கள் வெள்ளைக்காரர் போல் எமது பிரச்சனை தெரியாதவர்கள் போல் வாழ்கிறார்கள்
எமது இனத்தின் இன்னலை மறந்து போய்விட்டார்கள், ஒற்றுமை, அன்பு, இரக்கம் ஒன்றுமேயில்லை
இரக்கமுள்ள யேசுவே இவர்களை இரங்க வையும் –
அழிந்து போகும் உடலைப்பற்றி சொல்லும்
அழியா நிலை பெற என்ன செய்யவேண்டும் என கூறும், – இது இரக்கத்தின் ஒளி
யேசுவின் பிள்ளைகள் நாம் என கூறும் இவர்கள், பாராமுகம் காட்டி செல்கிறார்களே
இவர்களா கிறிஸ்தவர்கள் இல்லவேயில்லை…
இரக்கமுள்ளவர்கள் கிறிஸ்தவர்கள்
கொடுப்பவர்கள் கிறிஸ்தவர்கள்
அரவணைப்பவர்கள் கிறிஸ்தவர்கள்
ஏழையைப்பார்த்து உதவுபவர்கள் கிறிஸ்தவர்கள் – இது கிறிஸ்தவர்களின் ஒளி
மலைப் பொழிவின் போதனையில் யேசு சொன்ன வார்த்தைகள் ஞாபகம் இல்லையா
அதிகாரம் பொருந்திய மாமனிதர்கள், மன்னர்கள் சத்தியதர்மத்தை மறக்கும் போது உருவாவது தான் போர்
போர் அதிகாரமுள்ள மனிதர்களால் உருவாக்கப்படுவதாக இருந்தாலும், அதற்கும் மேலே வேறு காரணம் இருக்கிறது, அதை உன்னால் அறியமுடியுமா! எகிப்து மன்னன் எபிரோயரை வதைத்தது எப்படி, இறைவன் ஏழு வதைகளை எகிப்து மன்னனுக்கு கொடுத்தது எப்படி, அப்படியிருந்தும் மன்னன் பணிந்தானா இல்லை. ஏன்!
அது தான் இறைவன் திட்டம். போர், அழிவு மரணம், பிறப்பு எல்லாம், உலக நியதிதான். விதி என்பது மனிதன் இட்ட பெயர், சாதாரண மனிதனுக்கு அது புரியாது, அதற்கு ஞானம் தேவை!, விதி என்றால் விளாங்காத திட்டம் என்பதே பொருளாகும்.
மரணத்தின் பின் வாழ்வு உண்டா, நாம் வாழும் காலம் மட்டும் தான் வாழ்வா, அல்லது 7 பிறப்பு என்று ஒன்று உண்டா, இவை விளங்காத திட்டங்களாகும்., ஆனால், பிறப்பு வந்தால் மரணம் உண்டு என்பதை உணரும் மனிதன், தனது பிறப்பின் காரணம் அறிந்து நன்மை செய்து வாழவேண்டும், அது அவன் கடமை, ஏவாள் போல் ஏமாராதே என்பதே இறைவனின் ரகசியான கருத்தாகும், ஏவாளை ஏமாற்றிய சாத்தான் யேசுவையும் ஏமாற்றமுடிந்ததா இல்லை. அது தான் எடுத்துக்காட்டு, புரிந்து கொண்டு விபிலியத்தைப்படி, படித்துக்கொண்டு நல்லதைச் செய், அப்போ தான் உன்னில் ஒளி தெரியும்.
ஒளியும் நீயே இருளும் நீயே
பாவ மனதிற்கு ஒளியும் நீயே
இருளான இதயத்திற்கு ஒளியும் நீயே
அன்னை திரோசா ஒரு ஒளி பெற்ற தாய்
மற்றவர்கள் ஒளியைத் தேடும் தாய்கள்
அவர்கள் மற்றவரின் இருளை அகற்ற முயலாததால் அவதிப்படுகிறார்கள்
ஏழைகளை நேசித்தாய், மரித்தவரை உயிர்ப்பித்தாய், பாவிகளை மன்னித்தாய்
அன்பு உணர்வு என்பதை அறிய மனிதனாகப் பிறந்தாய், ஆனால்,
மனிதன் பாவியாக ஏன் இன்னும் இருக்கின்றான்
எமது கவலை மட்டும் உணர்கின்றோம், பிறரன்பை ஏன் அறியமுயலவில்லை
இறைவா புரியவையும், ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு விதம், அதனால் எம்மால் புரியவைக்கமுடியவில்லை.
ஒவ்வொரு தாயும் தன் பிள்ளையை தான் நேசிக்கின்றாள்
ஒவ்வொரு இனமும் தன் இனத்தை நேசிக்கிறது, தமிழன் ஏன் இதை புரிந்து வாழ்கின்றானில்லை
மனிதன் ஏன் சுயநலமாய் சிந்திக்கின்றான், இதை அறியத்தான் மனிதனாய் பிறந்தீரோ
கோபம் யேசுவிற்கும் வந்தது, வன்முறை யேசுவும் செய்தார்
எனது தந்தையின் ஆலயத்தில் வியாபாரமா செய்கிறீர்கள் என சொல்லி எல்லோரையும் அடித்து திரத்தினார்
யேசு அதனால் தீவிரவாதியா, இறைமகன் மனிதரில் மாணிக்கம்
உண்மையின் உருவம், அன்பின் வடிவம், நேசத்தின் இதயம்
உயிரும் நீயே உடலும் நீயே
எம்மில் மீண்டும் இரங்குவாய் யேசு பாலனே,
எம் சுமை போக்கும், எம் இருள் போக்கும், எம் பாவம் போக்கும், எம் கர்வம் போக்கும்
எமக்கு இனி ஒளி மட்டும் தாரும் யேசுவே! இது உண்மையின் ஒளி
மக்களே மலைப் பொழிவில் யேசு சொன்னதை மனதில் கொள்ளுங்கள்
பசியாக இருக்கிறாயா, வேதனையோடு இருக்கிறாயா, ஏழையாக இருக்கிறாயா நீ பாக்கியசாலி …..
உன்னை யாரும் அணுகிறார்களா உதவுகிறார்களா என நான் சோதிக்கிறேன். இது சோதனைக்காலம் உனக்கல்ல பணக்காரராய், நின்மதியாய், வயிறு நிறைய சாப்பிட்டு இருப்பவர்களுக்கே தான் சோதனைக்காலம், ஆனால், உங்களுக்கோ இது இலையுதிர்காலமே!
நீ நெருப்பாய் இருக்கிறாயா நான் மழையாக வருவேன்
நீ பசியாக இருக்கின்றாயா நான் அப்பமாக வருவேன்
நீ இருளாக இருக்கின்றாயா நான் ஒளியாக வருவேன்
நீ உறங்க வேண்டுமா நான் இருளாகவும் வருவேன்
நீ ஆறுதல் அற்று துன்பப்படுகின்றாயா நான் கனவாக வருவேன்
நீ சிறையில் இருக்கிறாயா நான் விடுதலையாக வருவேன்
நீ பேச துணையில்லை என்றால் பேச்சுத் துணையாக இருப்பேன். – இது இரட்சிப்பின் ஒளி
நான் எங்கும் இருப்பேன் அதை நீ உணருவாயாக, உன்னைப்போல் பிறரை நேசி
எழியவரை அன்பு செய், ஏழைகளுக்கு உதவு, அப்போ தான் நான் உனக்கு ஒளியாக இருப்பேன்………..
சத்தியம் வெல்லும், தர்மம் தலைகாக்கும், நேர்மை உண்மையைக் காத்து உன் சந்ததியை வாழவைக்கும்
நீ ஒளியாக மற்றவருக்கு மாறு……… உண்மையாக மாறு… அன்பாக மாறு…….
ஒளி உன்னைத் தேடி வரும்…………………………………………………… வரும். — இது உனது ஒளி
நத்தார் வாழ்த்துக்கள், வாழ்க அன்புடன் – நன்றி
அல்லையூர் அருள் தெய்வேந்திரன் (சுவிஸ்) கவிஞன் – சோதிடன் 25.12.2017