அல்லைப்பிட்டி கிராம வீதிகளுக்கு கட்டம் கட்டமாக மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்,முதற்கட்டம் நிறைவு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி கிராம வீதிகளுக்கு கட்டம் கட்டமாக மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்,முதற்கட்டம் நிறைவு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவக கிராமங்களில் ஒன்றான அல்லைப்பிட்டிக் கிராமத்தின் வீதிகளுக்கு மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இருளில் மூழ்கிக்கிடந்த, அல்லைப்பிட்டிக் கிராமத்திற்கு  மின் விளக்குகள் பொருத்துவது மகிழ்ச்சியான செய்தியாகும்.

முதற்கட்டமாக, அல்லைப்பிட்டிச் சந்தியிலிருந்து புனித கார்மேல் அன்னை (மாதா கோவில்) ஆலயம் மற்றும் சேமக்காலை  வரை வீதி மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து அல்லைப்பிட்டி பிரதான வீதி ஊடாக,  கூட்டுறவுச் சங்கம் வரையும்-அதைத்தொடர்ந்து செல்லத்துரை உடையார் வீதி ஊடாக, இனிச்சபுளியடி முருகன் கோவில் வரையும் -மேலும்  அல்லைப்பிட்டி  உப தபாற்கந்தோர் வீதியூடாக  பிரதேசசபையின் உப அலுவலகம் மற்றும் புனித அந்தோனியார் சந்திவரை   மின் விளக்குகள் இரண்டாம் கட்டமாக அடுத்தகிழமை பொருத்தப்படவுள்ளது.

மேலும் அல்லைப்பிட்டி கிழக்கு கறண்டப்பாய் முருகன் கோவில்வரையும்-அல்லைப்பிட்டி தெற்கு கடற்கரை வரையும்-அல்லைப்பிட்டி புனித அந்தோனியார் கோவில் சந்திவரையும்,கட்டம் கட்டமாக ஊர்முழுவதும் மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் 60க்கும் மேலான மின்விளக்குகள் பொருத்தப்படவேண்டும் என்றும்-ஒரு மின் விளக்குப் பொருத்துவதற்கு மின்சாரசபை ஊழியரின்  கூலி மற்றும் மின்குமிழ் உட்பட 5.000 ஆயிரம் ரூபா முடிகின்றது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலே குறிப்பிடப்பட்ட வீதிகள் அனைத்திற்கும்-  மின்விளக்குகளை பொருத்துவதற்கு அல்லைப்பிட்டியில் பெயருடனும் புகழுடனும் வாழ்ந்து மறைந்த, அமரர் வைத்திலிங்கம் செல்லத்துரை (உடையார்) அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் ஆகியோர்  நிதியுதவி  வழங்க முன்வந்துள்ளதாக-  இப்பொதுச்சேவையினை முன்னெடுத்துச் செயற்படுத்தி வரும்   திரு.திருமதி இரத்தினசபாபதி  ஸ்ரீரங்கநாயகி (றங்கம்) ஜெயகோபால் அவர்கள்  எமது இணையத்திற்குத் தெரிவித்துள்ளார்.

மேலதிக தொடர்புகளுக்கு…..

திரு.திருமதி இரத்தினசபாபதி  ஸ்ரீரங்கநாயகி (றங்கம்) ஜெயகோபால்

தொலைபேசி இலக்கம்…..0033 6 51 95 99 06

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux