அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 311 வது தடவையாக நடைபெற்ற சிறப்பு அறப்பணி நிகழ்வு!
கனடாவில் காலமான,மண்டைதீவு-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,திரு,திருமதி பரிமளகாந்தன்-கண்ணகை தம்பதியினரின் செல்வப்புதல்வன் அமரர் செந்தூரன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு- 05.12.2017 செவ்வாய்க்கிழமை இன்று அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-மன்னார் பேசாலை துள்ளுக்குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள செபமாலை மரியன்னை இல்லத்தில் வசிக்கும் மாணவிகளின் நலன் கருதி 50 கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டதுடன்-மேலும் சிறப்புணவும் வழங்கப்பட்டது.
அமரர் செந்தூரன் அவர்களின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல இறையருளை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!