வடக்கு,கிழக்கு மாகாணங்களிலும்,உலகில் தமிழர்கள் வாழும் நாடுகளிலும்-இன்று (27 .11.2017) மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வெழிச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.
மாவீரர் துயிலும் இல்லங்களிலும்,பொது இடங்களிலும் திரண்ட மக்கள் மாலை 6.05 மணிக்குச் சுடர் ஏற்றி,மாவீரர்களை நினைவில் ஏந்தி அஞ்சலித்தனர்.
மாவீரர்களின் உறவினர்கள்,மதப்பிரமுகர்கள்,பொதுமக்கள் எனப்பலரும், கண்ணீருடன் மாவீரர்களை நினைத்து அஞ்சலி செலுத்தினர்.
நீண்டகாலத்தடைக்குப்பின் -தீவகம் வேலணை சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் -இம்முறை மாவீரர் நினைவேந்தல் அஞ்சலி நிகழ்வு மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது.
உறவுகளின் கண்ணீருக்கு மத்தியில் மூன்று மாவீரர்களை பெற்றெடுத்த,திரு காசிலிங்கம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றிவைக்க அதேநேரம் கடலில் முதல் பெண் கடற்கரும்புலி கப்டன் அங்கையற்கண்ணியின் தாயார் சுடரினை ஏற்றி வைத்தார்.அதனைத் தொடர்ந்து உறவுகள் நினைவுச் சுடரினை ஏற்றி கண்ணீரோடு அஞ்சலி செய்தனர்.
