கிளிநொச்சி இரணைமடுக்குளம் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கிளிநொச்சி இரணைமடுக்குளம் துரிதகதியில் புனரமைக்கப்பட்டு வருகின்றது-படங்கள் விபரங்கள் இணைப்பு!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அபிவிருத்திப் பணி துரித கதியில் இடம்பெற்று வருகிறது. தற்போது 80 சதவீதம் நிறைவுற்றுள்ளது.

குளத்தின் அணைக்கட்டுகளும், வாய்க்கால்களும் மிகநீண்ட காலமாகப் புனரமைக்கப்படாததால் வினைத்திறனுடன் நீர்ப்பாசனத்தை முன்னெடுக்கவும் இயலவில்லை. இவற்றைக் கருத்திற் கொண்டு குளத்தின் நீர்க்கொள்ளவை 34 அடியிலிருந்து 36 அடிக்கு உயர்த்தி அதிகளவு நீரைச் சேகரிக்கும் பொருட்டுக் குளப் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று தற்போது நிறைவடையும் நிலையில் உள்ளது.

இப்புனரமைப்புப் பணிகளுக்கென ஆசிய அபிவிருத்தி வங்கி 2000 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது. மேலும், வாய்க்கால்களும், விவசாய வீதிகளும் புனரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. இதற்கு விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் 3200 மில்லியன் ரூபாவை வழங்கியிருந்தது

இரணைமடுக்குளத்தின் கீழ் ஏறத்தாழ 21,985 ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், கோடை காலத்தில் குளத்தில் தேக்கப்படுகின்ற நீரின் அளவு குறைவாக இருப்பதால், சிறுபோகத்தில் 8000 ஏக்கர் அளவுக்கு மட்டுமே நீர்ப்பாசனம் செய்யக் கூடியதாக இருந்து வந்துள்ளது. புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தால் இதன் மூலம் சிறுபோகத்தில் செய்கை பண்ணப்படும் பரப்பளவு 12000 ஏக்கர்களாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux