அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 302 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
கரம்பன்-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்களான,திருமதி திரேசம்மா ஸ்ரெனிஸ்லாஸ்,திரு ஸ்ரெனிஸ்லாஸ் மனுவேற்ப்பிள்ளை தம்பதிகளின் நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 21.11.217 செவ்வாய்க்கிழமை அன்று மதியச் சிறப்புணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அமரர்களின் அன்பு மருமகன் திரு அருள்நேசன் அவர்கள் கொழும்பிலிருந்து வருகைதந்து கலந்து கொண்டதுடன்-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தைச் சேர்ந்த,திரு இ.சிவநாதன் அவர்களும் வழமைபோல் கலந்து கொண்டார்.