அல்லைப்பிட்டியில் முன்னர் அமைந்திருந்த,அலுமினியம் தொழிற்சாலைக்கு கிழக்குப் பக்கமாக ஊர்மனைக்குச் செல்லும் வீதிக்கு வடகிழக்காக அமைந்துள்ள பற்றைகளின் ஒதுக்குப் புறங்களில் வந்து ஒன்று கூடும் வெளியிடங்களைச் சேர்ந்த,இனந்தெரியாத நபர்கள் சமூக சீரழிவு நடைவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும்-இவர்கள் மதுபோத்தல்களுடனும் மங்கைகளுடனும் காணப்படுவதனால்-இப்பகுதி ஊடாக செல்லும் பெண்கள்-மாணவர்கள் அச்சம் கொள்வதாக தொடர்ந்து தெரிவித்து வந்ததையடுத்து-இத்தகவல் பொதுமக்களினால் அல்லைப்பிட்டி கிராம சேவையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த விசமிகளை இப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் நோக்கோடு–கிராமசேவையாளர் திரு இரட்ணேஸ்வரன் அவர்களும்- இப்பகுதியைச் சேர்ந்த-இளைஞர்கள் பலரும் இணைந்து இப்பகுதியில் காணப்பட்ட ஒதுக்குப்புறமான பற்றைகள் அனைத்தையும் தீவைத்து செவ்வாய்க்கிழமை அன்று எரித்து அழித்தனர்.