கடும் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு 60ஆயிரம் ரூபாக்களைத் திரட்டி வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

கடும் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களுக்கு 60ஆயிரம் ரூபாக்களைத் திரட்டி வழங்கிய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

578175_142818142509816_100003448945950_101643_1241109046_n1380902_1409775992584965_197234036_n

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த, இரண்டு குடும்பத்தலைவிகள் கடும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்-அவர்களுக்கு உதவிட முன்வருமாறும்-அல்லையூர் இணையம் அண்மையில் வேண்டுகோள் ஒன்றினை விடுத்திருந்தது நீங்கள் அறிந்ததே! நாம் விடுத்த வேண்டுகோளினை வாசித்து அறிந்து கொண்ட-சில கருணைமிக்க சில உள்ளங்கள் அவர்களுக்கு உதவிட முன் வந்தனர்.

விபரங்கள் கீழே இணைப்பு

நோயினால் பாதிக்கப்பட்டுள்ள இருவரின் பெயர்கள்

01-திருமதி சோமசிறி புஸ்பராணி(மணி)அமரர் சின்னத்துரை அவர்களின் புதல்வி

02-திருமதி தேவியம்மா இராசரட்ணம்-அமரர் அருணாசலம் அவர்களின் புதல்வி

இவர்களுக்கான நிதியினை வழங்கிய அந்த கருணை மிக்க உள்ளங்களுக்கு-பாதிக்கப்பட்டவர்களின் சார்பிலும்-அல்லையூர் இணையத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.இவர்கள் தமது பெயர் விபரங்களை வெளியிடவேண்டாம் என்று பெருந்தன்மையோடு எம்மிடம் கேட்டுக் கொண்டபோதிலும்-உதவிய அந்த உள்ளங்களையும்-எமது இணையத்தின் நம்பிக்கையை தொடர்ந்தும் பேணும் முகமாக அவர்களின் பெயர்களை இணைக்க வேண்டிய கட்டாயம் எமக்கு ஏற்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பெயர் விபரங்கள்

01-திருமதி தேவராசா முத்துலட்சுமி-பிரான்ஸ்

02-திரு தவவிநாயகம் சூரியகுமார்-பிரித்தானியா

03-அமரர்கள் திரு,திருமதி,இரத்தினசபாபதி சிவயோகலட்சுமி(சார்பாக வழங்கப்பட்ட நிதி)

04-திரு வியாகரத்தினம் விமலராஜா (பிரான்ஸ்)

05-திரு செல்லையா சிவா-பிரான்ஸ்

இவர்களினால் வழங்கப்பட்ட மொத்தம் 60 ஆயிரம் ரூபாக்களை-கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் மேற்பார்வையில்-செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டி மெதடிஸ்த திரு அவையின் போதகர் கருணைராஜ் அவர்களும்-மற்றும் சமூக ஆர்வலர் திரு மகேஸ்வரநாதன் அவர்களின் புதல்வர் கிருசன் அவர்களும் இணைந்து-பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக சென்று வழங்கியிருந்தனர்.

இவர்கள் அனைவருக்கும் அல்லையூர் இணையத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

1392495_1409776002584964_155104460_n

இதனுடன் தொடர்புபட்ட முன்னைய செய்தி

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,இரண்டு குடும்பத்தலைவிகள்கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்-வறுமையோடு போராடும் இவர்களால் மேலதிக சிகிச்சை பெறுவதற்கான நிதிவலுவோ அல்லது சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்கான உடல்வலுவோ இவர்களிடம் இல்லாத நிலையில் வாழ்வதாகவும்- தமது மருத்துவ செலவுக்காகவேனும் உதவிபுரியுமாறு -அல்லையூர் இணையத்தின் ஊடாக-புலம்பெயர்ந்து வாழும் அல்லைப்பிட்டி மக்களிடம் உருக்கமான வேண்டுகோளினை விடுத்துள்ளார்கள்.

01-முதலாவது பெண்மணிக்கு-ஒரு சிறுநீரகம் முற்றாக செயலிழந்த நிலையிலும்-மிஞ்சியுள்ள மற்றைய சிறுநீரகமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில் இவர் நீண்ட நாட்கள் வாழ்வது சந்தேகமே என்றும்-அவரது மருத்துவச் செலவுக்கு உதவிட வேண்டும் என்று உங்கள் சார்பில் நாமும் விரும்புகின்றோம்.

02-இரண்டாவது பெண்மணி அல்லைப்பிட்டி கிழக்குப்பகுதியில் நன்கு அறியப்பட்டவர் திடகாத்திரமாக உலாவந்தவர்-ஆனால் கடந்த சில மாதங்களின் முன் நோய்வாய்பட்டு படுக்கையில் விழுந்தவரின் நிலமை தற்போது படுமோசமடைந்துள்ளதாக-இவரை பார்வையிட்ட மக்கள் எமது இணையத்திற்கு தெரிவித்தனர்.இவரின் நோய் விசித்திரமானது என்றும் இவருக்கு உணவு உட்செல்லும் தொண்டைக்குளாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும்-அதனால் உணவு நீர் உட்செல்லமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.இவர் தற்போது யாழ் போதனாவைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கருணை நெஞ்சம் கொண்ட-எமது கிராமத்து மக்களாகிய நீங்கள் நிட்சயம்  இவர்களுக்கு உதவமுன்வருவீர்கள் என்று நம்புகின்றோம்

மேலதி விபரங்கள் அறிந்து கொள்ள-உலகத்தின் எப்பாகத்திலிருந்தும் மிஸ்கோல் தாருங்கள்-நாம் தொடர்பு கொள்கின்றோம்.

தொலைபேசி இலக்கம்-0033651071652

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux