யாழ். மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Courbevoie ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கலியுகவரதன் (நந்தன்) அவர்கள் 09-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், மண்கும்பானைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளம்பலம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை பார்வதம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மாலினி(சுதா) அவர்களின் அன்புக் கணவரும்,
கவின், பிரிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான பராசக்தி, கனகரட்ணம் மற்றும் இரத்தினக்கிளி(இலங்கை), யோகேஸ்வரி(இலங்கை), ராகினி(பிரான்ஸ்), றஞ்சி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், இராஜலிங்கம், குழந்தைவேலு, கமலேஸ்வரி மற்றும் சுந்தரலிங்கம்(இலங்கை), தங்கேஸ்வரன்(பிரான்ஸ்), இந்திரன்(சுவிஸ்), ரஞ்சினிதேவி(கொலண்ட்), கலாநிதி(கனடா), சுபிதா(இலங்கை), ஞானேஸ்வரன்(இலங்கை), விக்கினேஸ்வரன்(கனடா), கோணேஸ்வரன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |