கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபரும்,வன்னியில் ஆதரவற்ற 400க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு குருகுலமாக இயங்கி வரும்-மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்லத்தின் பணிப்பாளருமாகிய,திரு திருநாவுக்கரசு இராசநாயகம் ஜயா அவர்கள் 02.11.2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.என்ற துயரச்செய்தியினை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
திருஇராசநாயகம் ஜயா அவர்கள் இறுதியாக,அல்லையூர் இணையம் 01.10.2017 அன்று நடாத்திய சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சொற்பொழிவாற்றியிருந்தார்.
கடந்த சில நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்-சிகிச்சை பலனளிக்காது-இன்று வியாழக்கிழமை மாலை அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.
ஜயாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம வல்ல இறையருளை வேண்டி நிற்கும்.
அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினர்.