அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற,போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற,போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணி-விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஜனாதிபதி செயலகத்தின் நிதி அனுசரணையில் சமூக சேவைகள் திணைக்களம், சமூக வலுவூட்டல் சமூக நலன்புரி அமைச்சின் மேற்பார்வையில், வேலணை பிரதேச செயலகத்தின் சமூக சேவைகள் பிரிவு போதைப்பொருளற்ற நாடொன்று எனும் தொனிப்பொருளில் 27-10-2017 வெள்ளிக்கிழமை அன்று காலை 9 மணியளவில் அல்லைப்பிட்டி பங்குத்தந்தை டேவிட் அடிகளாரின் ஆசியுரையுடன் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி புனித கார்மேல் அன்னை ஆலயத்திலிருந்து ஆரம்பமாகியது.

இப்பேரணியானது மாணவர்களின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அல்லைப்பிட்டி – மண்கும்பான் வீதி ஊடாக அல்லைப்பிட்டிச் சந்தி ஆல மரத்தடி வரை சென்றடைந்தது.

இப்பேரணியில், அல்லைப்பிட்டி பங்குத்தந்தை டேவிட் அடிகளார் , அருட்தந்தை பற்றிக் அடிகளார், அல்லைப்பிட்டி கிராம அலுவலர் ,வேலணை பிரதேச செயலகத்தைச் சேர்ந்தோர் , மது வரித்திணைக்களத்தைச் சேர்ந்தோர் , அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலய மாணவர்கள் ,அல்லைப்பிட்டி ரோமன் கத்தோலிக்க பாடசாலை மாணவர்கள் , போதைப் பொருளுக்கு எதிரான சமூக ஆர்வலர்கள் ,பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

அல்லைப்பிட்டி பராசத்தி வித்தியாலய முன்றலில் போதைப்பொருளுக்கு எதிரான பிரகடணத்தில் கையொப்பமிடப்பட்டதுடன்- பேரணி முடிவில் யாழ்ப்பாண முற்போக்கு அரங்க இயக்கத்தினரின் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாடகம் ஒன்றும் இடம்பெற்றது.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux