யாழ்ப்பாணத்தில் மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை-கவலையில் ஆழ்ந்த தமிழ் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ்ப்பாணத்தில் மூன்று குழந்தைகளுடன் தாய் தற்கொலை-கவலையில் ஆழ்ந்த தமிழ் மக்கள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

“உயிரிழந்த  தந்தை குறித்து  எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.  அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை?  போஸ்மோட்டத்தில்  தந்தையைப் பார்த்துவிட்டு  எங்கட அப்பா  வெள்ளைதானே ஏன் கறுத்தவர்?  வெள்ளையா வருவாரா?  அப்பா வர நாங்கள்  பாக்குக்கு போவோம் என்று  அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது?” என, சுனித்ரா எழுதிய கடிதம் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம், அரியாலையில் மூன்று குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட தாய் எழுதிய கடைசிக் கடிதம் பொலிஸில் சிக்கியுள்ளது. தனது பெற்றோருக்கும் நீதிபதிக்கும் என தனித்தனியே இரண்டு கடிதங்களை அவர் எழுதி வைத்திருக்கிறார்.

யாழ்ப்பாணம் அரியாலை  ஏ.வி.  ஒழுங்கையைச் சேர்ந்தவர். கிருஷாந்தன்  சுனித்திரா (வயது 28)   இவரது பிள்ளைகள் ஹர்ஷா (4),  இரட்டையர்களான  தஜித், சரவணன் (2).

சுனித்ராவின் கணவர் கிருஷாந்தன் கடந்த மாதம் மூன்றாம் திகதி கடன் தொல்லை தாங்க முடியாது தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து சுனித்ராவும் பிள்ளைகளும் அவரது பெற்றோருடனேயே வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையிலேயே அவரது மனைவியும் மூன்று குழந்தைகளுக்கும் நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்டனர். ஐஸ்கிறீமில் நஞ்சைக் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்த பின் தானும் அருந்தி சுனித்ரா உயிரிழந்துள்ளார்.

குடும்ப நண்பர் ஒருவருக்கு 1கோடியே 17 இலட்சம் ரூபாவைக் கடனாக கொடுத்ததாகவும், அதனை மீளப்பெற முடியாத நிலையிலேயே கிருஷாந்தன் தற்கொலை செய்துகொண்டதாகவும்  தெரிவிக்கப்படுகின்றது. கணவனை இழந்த மனைவி  கடந்த ஒருமாத காலமாக பெரும் கவலையுடன் வாழ்ந்துவந்த நிலையிலேயே  இந்த  துயரமான முடிவுக்கு  வந்துள்ளதாக   தெரிவிக்கப்படுகிறது. 

தற்கொலை செய்துகொண்ட  இந்த இளம்பெண்  தனது அம்மா, அப்பா,  அண்ணா, தம்பி ஆகியோரை விழித்து  எழுதியுள்ள  கடிதத்தில்  தான்  தற்கொலை செய்வதற்கான  காரணத்தை   தெரிவித்துள்ளார். 

“என்னை மன்னியுங்கள். பிறந்தவர்கள் யாவரும்  இறப்பவர்களே! ஒன்றை மட்டும் நினைத்து மனதை ஆறுதல்படுத்துங்கள்.  உங்கள் பிள்ளையின்  எல்லா ஆசைகளையும்  நிறைவேற்றியுள்ளீர்கள்.  வாழ்ந்த வருட காலம் குறைவானாலும் நான் இறைவனின்  அனுக்கிரகத்தைப் பெற்றவள். நான் உங்களுடன்  வாழ்ந்த வாழ்வும் நிறைவானதே. ஆயிரம் குறைகள் சூழ இருந்தும் அவை யாவும்  ஒரு தூசிக்கு சமனாக வைத்து மேலோங்கிய அன்பைத் தந்து என் புருஷன் தந்த வாழ்வும் நிறைவானதே. ஒரேயொரு கவலைதான். நாங்கள்  குடும்பமாக நீடித்த காலம் வாழ ஆசைப்பட்டோம். இறுதிவரை அதற்காக  போராடினோம்.  ஆனால் முடியவில்லை. போகின்றோம்.  என் அம்மாவை  கவனித்துக்கொள்ளுங்கள்,  என்னைவிட  என் புருஷன்  அவாவை  இறுதிக்காலம் வைத்து பார்க்க ஆசைப்பட்டார். அதுவும் முடியவில்லை.  நாங்கள் போகின்றோம்” என்று எழுதப்பட்டுள்ளது. 

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், குடும்ப நண்பருக்கு கடன் கொடுத்த விடயத்தினால்  கணவர்  தற்கொலை செய்துகொண்டதாகவும் இதனால்  கணவன் இல்லாத வாழ்க்கையை வாழ முடியவில்லை  என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“உயிரிழந்த  தந்தை குறித்து  எனது பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை.  அப்பா எப்ப வருவார்? அப்பா கண்திறந்திட்டாரா? எப்ப பார்ப்பார்? ஏன் வரவில்லை?  போஸ்மோட்டத்தில்  தந்தையைப் பார்த்துவிட்டு  எங்கட அப்பா  வெள்ளைதானே ஏன் கறுத்தவர்?  வெள்ளையா வருவாரா?  அப்பா வர நாங்கள்  பாக்குக்கு போவோம் என்று  அடுக்கடுக்காக என் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்னால் பதில் கூற முடியவில்லை. எத்தனை காலம் ஏமாற்றுவது? என் கணவரின் இறுதிக்கடிதத்தை இத்துடன் இணைத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளதுடன்  தாம்  கடன் கொடுத்தவரின்  பெயர் விபரங்களும்  அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux