தீவகச் செய்திகள் சிலவற்றின் தொகுப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகச் செய்திகள் சிலவற்றின் தொகுப்பு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

செய்தி..ஒன்று

யாழ்- தீவக பிரதான வீதியில்,மண்டைதீவுச் சந்திக்கருகில்,புங்குடுதீவு-மண்டைதீவைச்  சேர்ந்த, அமரர் மயில்வாகனம் மதனராசா அவர்களின் ஞாபகார்த்தமாக அன்னாரது உறவினர்களால் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பிடம் ஒன்று மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

செய்தி…இரண்டு

புளியங்கூடலில்  இனம்தெரியாதவர்களினால்  சினைப்பசு ஒன்று  நைலோன் கயிற்றினால் கழுத்திறுக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  பெறுமதி வாய்ந்த உயர் இனப்பசுவொன்று இந்து மக்கள் செறிந்து வாழும் புளியங்கூடல் கிராமத்தில் அதுவும் கந்தசஷ்டி விரதகாலத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதானது அப்பகுதி மக்களை  ஆத்திரம் கொள்ளவைத்துள்ளதாக தெரிய வருகின்றது. 

செய்தி ..மூன்று

தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மூன்று மத ஆலயங்கள் அமைந்த கிராமமாக மண்கும்பான் விளங்குகின்றது.
இங்குதான் சிவகாமி அம்மனும் கோவில் கொண்டு அருள்பாலித்து வருகின்றாள்.சிவகாமி அம்மன் ஆலயத்தை புனரமைக்கும் பணிகள் பல இடர்களுக்கு மத்தியில் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வேகமாக நடைபெறுகின்றது.அம்மன் அருளால்
தடைகள் யாவும் நீங்கி  ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் காணவேண்டும் என்பதே மண்கும்பான் மக்களின் விருப்பமாகும்.

செய்தி…நான்கு

கடந்த வருடம் போன்று இந்த வருடமும்,மண்கும்பான் வர்த்தகர்கள் சிலரின் அனுசரணையில் மண்கும்பானில் நெல் விதைக்கப்பட்டுள்ளதாகவும்-மழையின்மையால் விவசாயிகள் பெரும்கவலை கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிய வருகின்றது.

Leave a Reply