அல்லைப்பிட்டியில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர்வாழப்போராடிய இளைஞன் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர்வாழப்போராடிய இளைஞன் காலமானார்-விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டியில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் உயிர் வாழப் போராடி வந்த இளைஞன் மரியதாஸ் கமலதாஸ்  15.10.2017 ஞாயிறு அன்று காலமான செய்தியறிந்து பெரும் துயரடைகின்றோம்.

இவருக்கு உதவிட முன்வருமாறு அல்லையூர் இணையம் ஊடாகவும்-எமது முகநூல் ஊடாகவும் வேண்டுகோள் விடுத்ததுடன்-கடந்த வருடம், அல்லையூர் இணையத்தின் இயக்குனர் திரு செல்லையா சிவா அவர்கள்- அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள இவரது இல்லத்திற்குச் சென்று ஆறுதல் கூறி தைரியப்படுத்தியிருந்ததுடன்  உடனடி மருத்துவச் செலவுக்கு என்று நிதியுதவியும் வழங்கியிருந்தார்.

விதி வலிதன்றோ…

செல்வன் கமலதாஸின்  குடும்பத்தினர்  எடுத்துக்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  அன்று கமலதாஸ் காலமானார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 17.10.2017 செவ்வாய்க்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.

இவருடைய சகோதரனும், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அல்லைப்பிட்டியில் அகாலமரணமானார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply