யாழ் தீவகம் மண்கும்பான் 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட -சபாநாயகம் நல்லையா அவர்கள் 11.10.2017 புதன்கிழமை அன்று மண்கும்பானில் காலமானார்.அன்னாரின் இறுதிநிகழ்வுகள் 12.10.2017 வியாழக்கிழமை அன்று மண்கும்பானில் நடைபெற்றது.
அன்னாரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில்,அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-முழுமையான வீடியோ மற்றும் நிழற்படப்பதிவுகளை கீழே இணைத்துள்ளோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான,சபாநாயகம்-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான,சிவக்கொழுந்து-வீரகத்திப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற,சின்னம்மா (தங்கம்) அவர்களின் அன்புக்கணவரும்,
நாகபூரணி,செல்வபாக்கியம்,குணரெட்ணம்,மங்களேஸ்வரன்,செல்வராணி,சிவகுமார் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான,செல்லையா,சுந்தரலிங்கம் மற்றும் தவநாயகம்,உதயகுமாரி,தர்சினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வளர்மதி,மைத்திலி,செந்தில்கண்ணன்,செந்தில்கிருஷ்ணன்,அம்பிகை,காயத்திரி,டயானா,
ரமேஸ்,தினேஸ்,தவப்பிரியா,ஜெயப்பிரியா,கோபிநாத்,முரளிதரன்,சீமோன்,சமீனா,
ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியை,12.10.2017 வியாழக்கிழமை அன்று மண்கும்பானில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-அன்றைய தினம் பிற்பகல் 4 மணியளவில் சாட்டி இந்து மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.
இவ்வறிவித்தலை,உற்றார்,உறவினர்,நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்…
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு…
மகன்-சிவகுமார் (சுவிஸ்)
தொலைபேசி…0041715341019
0041766668115
செந்தில்கிருஷ்ணன் (இலங்கை)
0094771339953