அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின் 290 வது தடவையாக சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!
யாழ் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் கணபதிப்பிள்ளை விநாயகரெத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில் -கிளிநொச்சியில் அமைந்துள்ள மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு 12.10.2017 வியாழக்கிழமை அன்று மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-எல்லாம் வல்ல மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!