தீவகம் புங்குடுதீவில் நடைபெற்ற,சமூக எழுச்சிவார நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவில் நடைபெற்ற,சமூக எழுச்சிவார நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் புங்குடுதீவு  புனித சவேரியார் தேவாலய திருச்சபையின் அருட்தந்தை செபஜீவன் அவர்களின் தலைமையில் கடந்த பத்தாம் திகதி முதல் பதினேழாம் திகதிவரை பல்வேறு சமூக நலன் சார்ந்த நிகழ்வுகளை தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர் .

இதன் ஓர் அங்கமாக கடந்த 16 .09 .2017 அன்று புங்குடுதீவு உலகமையத்தின் ஆதரவுடன் புங்குடுதீவு பிரதான வீதியில் காணப்படுகின்ற மதுபான விற்பனை நிலையத்தினை நிரந்தரமாக அகற்றவேண்டும் அல்லது மக்கள் குடியிருப்புக்களற்ற பகுதிக்கு இடம்மாற்றிட வேண்டும் எனக்கோரி இளஞ்சமுதாயத்தினரால் விழிப்புணர்வு ஊர்வலமொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது .

இவ்வூர்வலம்  தேவாலயத்தில் ஆரம்பித்து ஆலடி சந்தி ஊடாக சென்று அம்பலவாணர் அரங்கடியில் திரும்பி முற்றவெளி ஊடாக மீண்டும் தேவாலயம் வரை  சென்று சுமார் ஆறு கிலோமீற்றர்  தூரம் வரை இளையோர் ஊர்வலமாக சென்றிருந்தனர் . அத்துடன் அன்றைய தினம் தேவாலயத்தில் இரத்ததான முகாமும் நடைபெற்றிருந்தது .

இறுதியில் புங்குடுதீவில் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படவேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் , அத்தியாவசிய தேவைகளை உடனடியாக தீர்ப்பதற்கான விதப்புரைகளும் உள்ளடங்கிய மகஜர் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது .

ஊர்காவற்துறை , வட்டுக்கோட்டை , நெடுந்தீவு பகுதிகளுக்கான உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் திரு . சரித் ஜயசுந்தர அவர்கள் மகஜரைப் பெற்றுக்கொண்டார் .

மகஜரின் மூலப்பிரதியானது தீவகம் தெற்கு பிரதேச செயலருக்கும், பிரதிகள் பிரதேச சபை செயலர் , மாவட்ட செயலர் ( GA ) , வடமாகாண முதலமைச்சர் , வடமாகாண ஆளுநர் , வடமாகாண ஆளுநர் அலுவலக செயலர் , வேலணை சுகாதார பணிமனை பணிப்பாளர் , நாடாளுமன்ற உறுப்பினர் திரு . மாவை சேனாதிராசா , திரு . சிவஞானம் சிறீதரன் , நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஈஸ்வரபாரதம் சரவணபவன் உள்ளிட்டோருக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டது .

படங்கள் -விபரங்கள்…திரு குணாளன் கருணாகரன்

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux