வானளாவ உயர்ந்த அழகான இராஜகோபுரத்துடன் மண்டைதீவு திருவெண்காட்டில் அமைந்திருக்கின்ற சித்தி விநாயகப்பெருமானின் ஆலயம் மிகவும் கீர்த்தி பெற்ற மூர்த்தி இருக்கும் புண்ணிய சேஷ்திரமாகும்.
இந்த எல்லையில்லாக் கருணைமிக்க தொல்லை வினை தீர்க்கும் திருவெண்காடு சித்தி விநாயகனுக்கு ஏவிளம்பி வருட மஹோற்சவம் (27.08.2017) ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு துவஜாரோகணம் எனும் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் நடைபெற்று வந்ததுடன்-03.09.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சித்திவிநாயகர் வேட்டையாடிய காட்சியும் அன்றிரவு அழகிய முத்துச்சப்பரத்தில் எம்பெருமான் வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம்பெற்றது.மறுநாள் 04.09.2017 திங்கட்கிழமை அன்று காலை சித்திவிநாயகர் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும்-05.09.2017 செவ்வாய்கிழமை அன்று சித்திவிநாயகர் தீர்த்தமாடிய காட்சியும் இடம் பெற்றது.
அல்லையூர் இணையத்தில்….
சித்தி விநாயகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத்தின் முக்கிய திருவிழாக்களான,
கொடியேற்றம்,
வேட்டை,சப்பரம்
தேர்
தீர்த்தம்
ஆகிய திருவிழாக்கள், அனைத்தும் பதிவு செய்யப்பட்டு உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.





















































