இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதிவிபத்துக்களால் மனித உயிர்கள் தினமும் அழிகின்றது-படித்துப்பாருங்கள்!

இலங்கையில் அதிகரித்துச் செல்லும் வீதிவிபத்துக்களால் மனித உயிர்கள் தினமும் அழிகின்றது-படித்துப்பாருங்கள்!

தீவக பிரதான வீதியில் மண்டைதீவுச் சந்திக்கருகில்  திங்கள் மாலை (04.09.2017)இடம்பெற்ற விபத்தின் நேரடிக்காட்சிகளின் நிழற்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

நாட்டில் பல பாகங்க ளில் கடந்த 24 மணி நேரத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 44 பேர் காயமடைந் துள்ளனர்.
இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாகவுள்ள தாக வைத்திய
சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றுமுன்தினம் இரவு மஹரகம நாவின்ன சந்தியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 19 பல்கலைக்கழக மாணவர்கள் காய மடைந்த நிலையில் களுபோவில வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஒரு மாணவர் மேலதிக சிகிச்சை க்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தலங்கம பிரதேசத்தில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று மீண் டும் பல்கலைக்கழக விடுதிக்கு திரும்பிய கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர மாணவர்களே இந்த விபத்தில் காயமடைந்து வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் பயணம் செய்த பஸ் வண்டி மோட்டார் வாகனமொன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பஸ் வண்டியில் 65 மாணவர்கள் பய ணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் யாழ்.நாவற்குழி பகுதியில் மோட்டார் சைக்கிளும் ஹயஸ் வாகனமும் மோதியதில் ஒருவர் காயமடைந்த நிலை யில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.

ஒட்டுசுட்டான் சமணங்குளத்தில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.4 பேர் சென்ற ஓட்டோ, பார ஊர்தியுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழ ந்துள்ளதுடன் ஏனையோர் மேலதிக சிகிச் சைக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்ப ப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
இச்சம்பவத்தில் மன்னா கண்டல் வசந்த புரத்தைச் சேர்ந்த கோபால கிருஷ்ணன் – ஜெனனன் (வயது-17) என்ற இளைஞர் சம் பவ இடத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

கூழாமுறிப்பு ஒட்டுசுட்டானைச் சேர்ந்த சகோதரர்களான செல்வகுமார்-தருசன் வயது 23, செல்வகுமார்-விதுசன் வயது – 19, ஆகியோரும் கூழா முறிப்பு ஒட்டுசுட்டா னைச் சேர்ந்த சவுந்தரராஜா-பரேந்திரன் வயது-19, என்பவரும் படுகாயமடைந்த நிலை யில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மேலதிக அதிதீவிர சிகிச்சை களுக்காக சவுந்தரராஜா-பரேந்திரன் (வயது – 19) என்பவர் அனுராதபுரம் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்;.

இதேவேளை யாழ்-கண்டி ஏ9 வீதி திறப் பனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விப த்தில் பௌத்த பிக்குணி ஒருவர் உயிரிழந் துள்ளார்.

7 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாகன த்தில் 11 பேர் பயணம் செய்துள்ளமை குறி ப்பிடத்தக்கது.
படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவோர் ஆபத்தான நிலை யில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் அம்பாறை திருக்கோவில் கள்ளியம்தீவு பகுதியில் முச்சக்கரவண்டி தடம்புரண்டு எதிரே வந்த பேருந்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி வித்தனர்.

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி திருக்கோவில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.39 வயதுடைய ஏ.யோகேஸ்வரன் என்பவரே உயிரிழந்தவ ராவார்.
தொடர்ந்தும் மாத்தறையில் நேற்று மதி யம் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரி ழந்துள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ள னர். தம்புள்ளை மாத்தறை வீதி பன்னி பிட் டிய பகுதியில் வான் மற்றும் பேருந்து மோதி யதில் குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

அத்துடன் வானில் பயணித்த ஒரே குடு ம்பத்தை சேர்ந்தவர்கள் குறித்த விபத்தில் காயமடைந்துள்ளதுடன் காயமடைந்தவர்க ளில் 5 வயது சிறுமியும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

படங்கள் …முகநூல் நண்பர்கள்..

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux