கறவைப்பசுவும்,மதிய உணவும் வழங்கிய கருணை உள்ளம்!
முள்ளிவாய்க்காலில் கணவனை இழந்து ஜந்து பிள்ளைகளுடன் வாழும்-முல்லைத்தீவு செம்மலையைச் சேர்ந்த,திருமதி ரவிக்குமார் இராஜேஸ்வரி அவர்களுக்கு-பிரான்ஸில் வசிக்கும்- மண்கும்பானைச் சேர்ந்த- திரு நாகராசா இராஜலிங்கம் அவர்களின் 60 வது பிறந்தநாளை முன்னிட்டு -வாழ்வாதார உதவியாக- 29.08.2017 செவ்வாய்கிழமை அன்று அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தின் ஏற்பாட்டில்-தமிழர் மேம்பாட்டுக்கழகத்தினூடாக ஒரு லட்சம் ரூபாக்கள் பெறுமதியான (செலவுகள் உட்பட) கறவைப்பசு ஒன்று பயனாளியிடம் வழங்கி வைக்கப்பட்டது.
இப்பேருதவியைச் செய்த கருணை வள்ளல் மண்கும்பானைச் சேர்ந்த- திரு நாகராசா இராஜலிங்கம் அவர்கள் வாழ்வில் எல்லாச்செல்வங்களும் பெற்று வாழ-இறையருள் வேண்டி வாழ்த்துகின்றோம்.
அத்தோடு அன்றைய தினம் அல்லையூர் இணையத்தின் 1000 தடவைகள் அன்னதானம் என்னும் பசிதீர்க்கும் அரிய பணியின்-277வது தடவையாக-யுத்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பகுதியான, முல்லைத்தீவு மணலாறு கருநாட்டுக்கேணியில் இயங்கி வரும் அரும்புகள் சிறுவர் கழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு 29.08.2017 செவ்வாய்க்கிழமை அன்று மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது.
இதற்கான நிதி அனுசரணையினை திரு நாகராசா இராஜலிங்கம் அவர்களே வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அவருக்கு அல்லையூர் இணையத்தின் சார்பிலும்,பயனாளி திருமதி ரவிக்குமார் இராஜேஸ்வரி அவர்களின் சார்பிலும் , அரும்புகள் சிறுவர் கழகத்தின் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.