பிரான்ஸில் வசிக்கும்-செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகாஅவர்களின் பிறந்தநாளை  முன்னிட்டு  சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

பிரான்ஸில் வசிக்கும்-செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகாஅவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புணவு வழங்கிய நிகழ்வு!

கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று    கோளாவில் பகுதியில் அமைந்துள்ள அம்மன் மகளிர் இல்ல மாணவிகளுக்கு-எமது கிராமத்திற்கு பெருமை சேர்த்து வரும்,மாணவி செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா அவர்களின் 23 வது பிறந்த நாளை முன்னிட்டு-17.08.2017 வியாழக்கிழமை அன்று -அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்- மதிய சிறப்புணவு வழங்கப்பட்டது.

பிரான்ஸில் வசிக்கும்-  செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா அவர்கள்- பல்கலைக்கழக புலமைப்பரீட்சையில் தேர்வாகி,அமெரிக்கா,கனடா ஆகிய இரு நாட்டு பல்கலைக்கழகங்களிலும்- குறுகிய கால பட்டப்படிப்புகளை மேற்கொண்டு திரும்பியுள்ளார் என்பதனை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம்.மேலும் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி Valery Giscard d’Estaing அவர்களின் தலைமையில்  ஜெர்மனியில் நடைபெற்ற-German-French-YounG LEader’s  Conference  மாநாட்டில் பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதியாக செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா  அவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார் என்பதும் மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

செல்வி ஸ்ரனிஸ்லாஸ் அனுசிகா அவர்கள் மேலும் கல்வியில் சிறப்புற்றுவிளங்க இறையருள்    வேண்டி வாழ்த்துகின்றோம்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux