அறப்பணிக்கு உதவிவரும்,பரிஸ் லாசப்பல் வர்த்தகரின்  பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த அல்லையூர் இணையம்-படங்கள் இணைப்பு!

அறப்பணிக்கு உதவிவரும்,பரிஸ் லாசப்பல் வர்த்தகரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த அல்லையூர் இணையம்-படங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் பழைய மாணவரும்-பரிஸ் லாசப்பலில் புகழ்பெற்ற,K.M.S நகைக்கடை உரிமையாளரும்- அல்லையூர்  இணையத்தின்   அறப்பணிக்கு தொடர்ந்து பல வருடங்களாக,உதவிவருபவருமாகிய, எமது அன்புக்குரிய  திரு கதிர்காமு மோகனசுந்தரம் (மோகன்) அவர்களின் 51 வது பிறந்த நாளான 17.08.2017 வியாழக்கிழமை அன்று  பரிஸ் லாசப்பலில் அமைந்துள்ள அவரது  நகைக்கடையில்,எழிமையான முறையில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

அன்றைய தினம்-திரு கதிர்காமு மோகனசுந்தரம் (மோகன்) அவர்களின் பெற்றோர்களான-புங்குடுதீவைச் சேர்ந்த,அமரர்கள் திரு,திருமதி கதிர்காமு-நல்லம்மா தம்பதியினரின் நினைவாக-அல்லையூர் இணைய அறப்பணிக்குடும்பத்தினரின் ஏற்பாட்டில்-கிளிநொச்சி மகாதேவா சுவாமிகள் சிறுவர் இல்ல மாணவர்களுக்கு மதிய சிறப்புணவும் வழங்கப்பட்டது.

இச்சிறப்புணவு வழங்கிய நிகழ்வானது- அல்லையூர் இணையம் முன்னெடுத்து வரும் ஆயிரம்(1000) தடவைகள் அன்னதானம்..என்னும் பசி தீர்க்கும் அரிய பணியின் 275 வது தடவையாக நடத்தப்பட்ட  நிகழ்வாகும்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux