மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான காணொளி இணைப்பு!

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியின் முழுமையான காணொளி இணைப்பு!

யாழ் தீவகம் மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 29.07.2017 சனிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம் பெற்று-பின்னர் முத்துமாரி அம்மன் வீதியுலா வந்ததுடன்-06.08.2017  ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக்காட்சியும் இடம் பெற்றது.

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்மனின் வருடாந்த மகோற்சவத்தினைக் காண-உள்ளூரிலிருந்தும்-வெளிநாடுகளிலிருந்தும்-பெரும் எண்ணிக்கையில்  பக்தர்கள் வந்திருந்ததாக தெரிய வருகின்றது.

மண்டைதீவு வேப்பந்திடல் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரிஅம்பாளின் வருடாந்த தேர்த்திருவிழாவினை- உலகமெல்லாம் பரந்து வாழும் மண்டைதீவு மக்களின் பார்வைக்கு எடுத்து வருவதற்கான அனுசரணையினை-மண்டைதீவைச் சேர்ந்த பிரபல புகையிலை வர்த்தகர் அமரர் சின்னத்தம்பு வைரவநாதன் அவர்களின்  நினைவாக-அன்னாரது குடும்பத்தினரால் வழங்கப்பட்டுள்ளது என்பதனை அறியத் தருகின்றோம்.  

Leave a Reply