ஒரே சூலில் கருத்தரித்து 3 குழந்தைகளைப்,பெற்றெடுத்த மண்டைதீவு பெண்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

ஒரே சூலில் கருத்தரித்து 3 குழந்தைகளைப்,பெற்றெடுத்த மண்டைதீவு பெண்-விபரங்கள் படங்கள் இணைப்பு!

மண்டைதீவைச் சேர்ந்த,சிறிதரன் & புஷ்பகாந்தா தம்பதியரின் ஒரே சூலில் கருத்தரித்த 3 சிசுக்களை, யாழ் மருத்துவமனையில் பணியாற்றும் வைத்தியர்களின் கடும் முயற்சியின் பலனாகவும்,  தாய்க்கு  சுவாச நோயினால் உயிராபத்து ஏற்பட்ட காரணத்தினாலும்-  எட்டாவது  மாதத்தில் கடந்த 10.05.2017  அன்று  அவசர சத்திர சிகிச்சை மூலம் யாழ் போதனா வைத்தியசாலை(விடுதி-22)இல் குழந்தைகள்  பிரசவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில மாத கால  மருத்துவ சிகிச்சையின் பின் தற்போது தாயும்,சேய்களும் நலமுடன் இல்லம் திரும்பியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு பெண் குழந்தைகளையும்,ஒரு ஆண் மகவையும் பெற்றெடுத்த-மண்டைதீவில் வசிக்கும் திருமதி புஷ்பகாந்தா சிறிதரன் அவர்கள்- மண்டைதீவு,அல்லைப்பிட்டி பகுதியில் நன்கு அறியப்பட்ட திரு. கிருபாமூர்த்தி அவர்களின் புதல்வியாவார்.

இது தொடர்புபட்ட  வைத்திய நிபுணரின் செய்தி கீழே இணைக்கப்பட்டுள்ளது.

10/05/2017 எமக்கு அதிஷ்டமான நாள். சிறீதரன் & புஷ்பகாந்தா தம்பதியரின் ஒரே சூலில் கருத்தரித்த 3 சிசுக்களை, தாயிற்கு சுவாச நோயினால் உயிராபத்து ஏற்பட்டதால் 8 மாதங்களில் அவசரமாக சத்திர சிகிச்சை மூலம் யாழ் போதனா வைத்தியசாலையில்(விடுதி-22) பிரசவித்தோம். சில மாதகால போராட்டத்தின் பின் அனைவரும் சுகமாக வீடு திரும்பினர். எனது மகப்பேற்று வைத்தியநிபுணர் குழுவுடன் சேர்ந்து பங்காற்றிய…..Dr.கௌறி செல்வரட்ணம்(பொது வைத்தியநிபுணர்), Dr.S.பிறேமகிருஷ்ணா & Dr.A.ஜானகி(உணர்வழியியல் வைத்திய நிபுணர்கள்) மற்றும் Dr.S.ஜெயபாலன்(குழந்தை வைத்தியநிபுணர்) ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux