தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 28.07.2017 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வருகின்றது .வரும் 06.08.2017 ஞாயிறு அன்று தேர்த்திருவிழாவும்-மறுநாள் திங்கட்கிழமை தீர்த்தத்திருவிழாவும் இடம் பெறவுள்ளது.
பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவத்தினைக் காண- வெளியிடங்களிலிருந்தும்- புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலிருந்து, முத்துமாரி அம்மனின் பக்தர்கள் பலர் வருகை தந்திருந்ததை,நேரில் காணமுடிகின்றது.
அல்லையூர் இணையத்தினால்,முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட-முத்துமாரி அம்மனின் 8ம் நாள் பகல் மற்றும் இரவுத் திருவிழாக்களின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அனுசரணை…
பரிஸில் நம்மவரின் நன்மதிப்பைப் பெற்ற-வேலணையைச் சேர்ந்தவரின் நாணயமாற்று நிறுவனமே-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த 8ம் நாள் திருவிழாவின் வீடியோ மற்றும் நிழற்படங்களின் பதிவுக்கான நிதி அனுசரணையினை வழங்கியுள்ளனர்-என்பதனை நன்றியோடு அறியத் தருகின்றோம்.